கொடைக்கானலில் நாளை முதல் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கை அமல் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 10 டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறப்படும். இதனால் மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த […]
பள்ளி வாகனத்தில் கேமரா மற்றும் வேகக்கட்டுப்பாட்டு சாதனம் இருந்தால் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் தமிழகத்தில் முழுவதும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தூத்துக்குடியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார் அம்மாவட்ட ஆட்சியர். இதன்பின் பேசிய அவர், பள்ளி வாகனத்தில் இது இருந்தால் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்படும் என கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 25 அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் வீடு கட்டாமலேயே கட்டியதாக ரூ.7 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 2016 முதல் 2020 வரை அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் 480 வீடுகள் கட்டியதாக மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. 480 வீடுகள் கட்ட பயனாளிகளுக்கு ரூ.7 கோடி வரை பணம் தந்து மோசடி செய்ததாக 25 அரசு ஊழியர்கள் […]
மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்ட அகமதாபாத்தை சேர்ந்த சிறுமி அவரது விருப்பம் போல ஒரு நாள் கலெக்டராக இருந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி தான் புளோரா. கடந்த 7 மாதங்களாக மூளைக் கட்டியால் அவதிப்பட்டு வந்த சிறுமி நன்றாக படிக்கக்கூடிய சிறுமி என குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த சிறுமிக்கு கலெக்டர் ஆக வேண்டும் என ஆசை இருந்ததாக சிறுமி குறித்து மேக் எ விஷ் பவுண்டேஷன் அதிகாரிகள் கலெக்டரிடம் தெரிவித்துள்ளனர். […]
கோவை மாவட்டம் ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோரை இடமாற்றம் செய்து புதிய அதிகாரிகளை நியமித்த தேர்தல் ஆணையம். கோவை மாவட்டம் ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் ராசாமணி, ஆணையர் சுமித்சரணை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளும்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரில் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு வந்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் இருவரையும் தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்ததாக தகவல் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு மாவட்டத்தின் கலெக்டர் ரோகினி சிந்தூரி பஞ்சரான தனது காருக்கு ரோட்டில் வைத்து தானே ஸ்டெப்னி மாறியுள்ளார், இதைக் கண்டு பொதுமக்கள் பலரும் வியந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தின் ஆட்சியராக இருப்பவர்தான் ரோஹினி சிந்தூரி. நேர்மையான தனது நடத்தையால், அதிரடியான நடவடிக்கை எடுப்பவராக இருப்பதாலும், மக்கள் பலரும் விரும்பக்கூடிய ஒரு மாவட்ட ஆட்சியரகத்தில் ரோகிணி திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ரோகினி மால் ஒன்றுக்கு சுடிதாருடன் தனது விடுமுறையை […]
குடியாத்தம் அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் ஒரு கூலித் தொழிலாளி ஆவார். இவரது மகன் நரசிம்மன் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய திறன் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், நரசிம்மன் இருளர் சாதி சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதனையடுத்து, குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர் நேற்று மாணவன் நரசிம்மனை அழைத்து, விசாரணை செய்து சாதி சான்றிதழ் வழங்கினார். அப்போது, ஷேக் […]
சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, இந்திய அரசு 21வரும் நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,திருப்பூரில் காலையில், சந்தைக்கு வருபவர்கள் கிருமி நாசினி சுரங்க பாதைக்குள் சென்ற பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறுகையில், ‘காலையில், சந்தைக்கு வருபவர்கள் கிருமி நாசினி சுரங்க […]
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் அணைத்து காளைகளில் விபரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யாத காளைகள், போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாது. ஈரோடு அருகே பவளத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் வருகின்ற ஜனவரி மாதம் 18ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் காளையின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து காளை உரிமையாளர்கள் அருகில் […]
மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் சொட்டி சிங். இம்மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ ,மாணவியர்கள் வனத் துறையினருடன் சேர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்த விழாவிற்கு மாவட்ட கல்வி அதிகாரி போன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலெக்டர் சொட்டி சிங் அழைக்கப்பட்டார். சொட்டி சிங்கை வரவேற்பதற்காக மாலைகள் வாங்கி வந்திருந்தனர். அந்த மாலையை பள்ளி தலைமையாசிரியர் பி.எஸ் சவுகான் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக நேற்று வானிலை மையம் அறிவித்தது .இதனைத்தொடர்ந்து மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க அரிபிக்கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுத்தப்பட்டிருக்கிறது . இந்நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மலை பெய்து வருகிறது .வேலூரில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது .இதனால் வேலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார் .
விடுப்பு விண்ணப்பமும் அளிக்காமல், பணிக்கும் வராத ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடிய சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய ஏராளமானவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளையும் டிச..,24 தேதியும் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் ஸ்தாணுமாலையன் கோவில் மார்கழி திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நாளையும் மற்றும் கிறிஸ்துமஸ் ஈவ் விழாவிற்காக திங்கட்கிழமையும் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவனது டிச.18 தேதி நடைபெறுகிறது.இதனால் அன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் அன்றைய நாளில் அம்மாவட்டமே விழா கோலம் பூண்டு கொண்டாடுவது வழக்கம் இந்நிகழ்வை ஒட்டிய டிசம்பர் 18 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பாற்றில் கொட்டப்படுகின்ற கழிவுகள் யாரால் கொட்டப்படுகிறது என்று பார்த்தால் அது அங்கு பெரும் கலவரத்தை ஏற்படுத்தி மக்களின் உயிரை துப்பாக்கியால் காவு வாங்கிய ஸ்டெர்லைட் ஆலை தான் இந்த கழிவுகளை கொட்டுகிறது என்று காந்திமதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தனது மனுவில் தெரிவித்தார். இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளை அகற்றி […]
உச்சநீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் எச்சரித்து உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து விடுதிகள் கட்டப்பட்டு இருந்தது.இதனை அகற்ற உச்சநீதிமன்ற மாவட்ட ஆட்சியருக்கு உத்தர்விட்டிருந்தது.இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அம்மாவட்ட ஆட்சியர் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் […]
அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என்று சென்னை ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என்று ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார். மேலும்ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது வணிக கட்டடங்கள், கல்லூரிகள், ஓட்டல்கள் உள்ளிட்ட எவையும் இந்த நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க இயலாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ள பாதிப்பை தடுக்கவும், மறுகுடியமர்த்தும் நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என சென்னை ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். DINASUVADU
திருச்சி முக்கோம்பு பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்காக அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 30 நாட்களுக்கு முன் திருச்சி முக்கோம்பு கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. முக்கொம்பு பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது . இந்நிலையில் 30 நாட்களுக்கு பின் திருச்சி முக்கொம்பு பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கி ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். இன்று முதல் முக்கொம்பு பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு […]
இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி சிவகங்கையில் 5 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி சிவகங்கையில் 5 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.மாணவர்களின் பாதுகாப்பு கருதி மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறைஅளித்து சிவகங்கை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். DINASUVADU
தூத்துக்குடியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.ஆட்சியர் சந்தீப் நந்தூரி திடீரென ஆய்வு செய்தார். நேற்று தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் சந்தித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்பொழுது பெயர் சேர்ப்பு படிவத்தை அலுவலரிடம் இருந்து வாங்கி ஆய்வு செய்தார். மக்கள் பலர் அங்கு வந்து தங்களின் வாக்காளர் அட்டை தொடர்பான திருத்தங்கள்,புதிதாக வாக்காளர் அட்டை பதிவு செய்தனர்.நேற்று தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு […]