வரலாறு காணாத கனமழையால் தென் மாவட்ட ரயில்கள் ரத்து..!

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை- தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நிஜாமுதீன்- குமரி விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. முத்துநகர் ரயில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில்  இரு மார்க்கத்திலும் ரத்து … Read more

மேலும் 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி 4 ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பின்னர் ரெட் அலர்ட் காரணமாக  தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக தேனி, சிவகங்கை, ராமநாதபுரம்,  மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு … Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..!

Heavy Rain in Tamilnadu

வடகிழக்கு பருவநிலை மீண்டும் தீவிரமடைய உள்ளதால் தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில்,  ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை உட்பட 18  மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், … Read more

திமுக ஆட்சியை விமர்சித்த திமுக கவுன்சிலர்!

இலவச டிக்கெட்டால் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்கள் அவமதிக்கின்றனர் என திமுக கவுன்சிலர் விமர்சனம். சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய 16-ஆவது வார்டு திமுக கவுன்சிலரும், ஒன்றிய குழு உறுப்பினருமான ஈஸ்வரன், பேருந்தில் இலவச டிக்கெட்டால் பெண்களை ஓட்டுநர், நடத்துநர்கள் அவமதிக்கின்றனர் என ஆவேசமாக பேசியதால், திமுக ஒன்றிய குழு தலைவர் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தால் பெண்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் … Read more

#BREAKING: கச்சநத்தம் கொலை வழக்கு – 27 பேருக்கு ஆயுள் தண்டனை!

கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு. கச்சநத்தத்தில் கடந்த 2018ல் நடந்த மோதலில் பட்டியலினத்தவர் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2018ல் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலையடுத்து ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேர் குற்றாவளிகள் … Read more

தரமற்ற சாலைகள் அமைத்ததால் 3 பொறியாளர்கள் பணியிடை நீக்கம்..!

சிவகங்கை மாவட்டத்தில் தரமற்ற சாலைகள் அமைத்த காரணத்தால் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், ஆண்டிச்சியூரணி-ஒட்டானம் இடையே தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் சாலையை ஆய்வு செய்யுமாறு நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சாலையின் தரம் மற்றும் அப்பகுதியில் குறைபாடு இருந்துள்ளது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் தரமற்ற சாலைகளை அமைத்த பொறியாளர்களான மாரியப்பன், மருதுபாண்டி, நவநிதி ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளனர். … Read more

மதுப்போதையில் காரை அதிவேகமாக ஓட்டி விபத்தில் சிக்கிய 6 பேர் .! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்.!

மதுப்போதையில் காரை அதிவேகமாக ஓட்டியதால் கார் கவிழ்ந்து 6 பேர் விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது . கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் பார்ப்பவர்களை பீதியடைய செய்துள்ளது . இளைஞர்கள் 6 பேர் தங்களது நண்பனின் பிறந்தநாளை மொட்டையன்வயல் என்னும் கிராமத்தில் கொண்டாடியுள்ளனர். அதனையடுத்து மதுப்போதையில் இருந்த 6 பேரும் ஒரே … Read more

அகரத்தில் நடந்த அகழாய்வு.. கி.பி. 17ஆம் நூற்றாண்டில் உபயோகித்த தங்க நாணயம் கண்டெடுப்பு!

கி.பி 17 நூற்றாண்டில் இந்த நாணயம் உபயோகத்தில் இருந்தாக கண்டறியப்பட்டுள்ளது சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் என தெரிவித்த நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. மார்ச் 24-ம் தேதி கொரோனா வைரஸ் தாக்கத்தால், அகழாய்வு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில், மே 22-ம் … Read more

20 நாட்களாக கொரோனா தொற்றில்லா சிவகங்கை.! ஆட்சியரின் அதிரடி நடவடிக்கைகள்.!

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக இதுவரை புதிய கொரோனா தொற்று ஏற்படவில்லை.மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், சில மாவட்டங்களில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக பாதிக்காமல் இருந்து வருகிறது. அதில் முக்கியமானது சிவகங்கை மாவட்டம்.  சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக இதுவரை புதிய கொரோனா தொற்று ஏற்படவில்லை.மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். சிவகங்கை … Read more

முதலில் அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் -உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி என்பவர் வெற்றிபெற்றது செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு  தேவி என்பவரும் , தேவியை எதிர்த்து பிரியதர்ஷினி என்பவர்  போட்டியிட்டார்.முதலில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக அவருக்கு வெற்றிச்சான்றிதழும் கொடுக்கப்பட்டது.பின்னர் பிரியதர்ஷினி 63 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2 பெண்களுக்கு வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது … Read more