தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க ஸ்டாலின் கெஞ்சி கூத்தாடுகிறார் -அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு தகவல்

தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க திமுக தலைவர் ஸ்டாலின் கெஞ்சி கூத்தாடுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  Minister Kadambur Raju

மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.

தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க திமுக தலைவர் ஸ்டாலின் கெஞ்சி கூத்தாடுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

அதேபோல் மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.

unknown node

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலன் குறித்து விசாரிக்க அவரது இல்லத்தில் சந்தித்தார்.

மேலும்  பிப்ரவரி 22 ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்.அப்போது விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்  மு.க.ஸ்டாலின்.இந்த சந்திப்புகள் அரசியலில் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

unknown node

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க திமுக தலைவர் ஸ்டாலின் கெஞ்சி கூத்தாடுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க ஸ்டாலின் கெஞ்சி கூத்தாடுகிறார் -அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு தகவல்