தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்ததாவது:மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் தான் வெளியிட்டதே தவிர கட்டமாய திரையரங்கை திறக்கச் சொல்லவில்லை என்று கூறிய அவர் திரையரங்க உரிமையாளர்கள், தொழிலாளர்களின் நலனை கருத்து கொண்டு விரைவில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளா.
படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருவது குறித்து முதல்வர் பழனிசாமியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதியளிப்பது பற்றியும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். இதனிடையே கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் 3 ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முதலில் அமல்படுத்தப்பட்டதில் இருந்து […]
சூர்யாவை பற்றி தனிபட்ட முறையில் விமர்சனம் செய்யும் அவசியம் எனக்கு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யா, புதிய கல்வி கொள்கையை கடுமையாக சாடினார். அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியரின்றி படிக்கும் போது நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வார்கள் என கேள்வி எழுப்பினார்.இந்த கருத்துக்கு அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக செய்தித்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு கூறுகையில், சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக […]
மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது. தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க திமுக தலைவர் ஸ்டாலின் கெஞ்சி கூத்தாடுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. அதேபோல் மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் […]
மக்களிடையே பீதியை ஏற்படுத்த முயன்றதால் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், மக்களிடையே பீதியை ஏற்படுத்த முயன்றதால் கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்று பொறுப்பில் உள்ள கருணாஸ் போன்றோர், பிரச்சனையை தூண்டும் விதத்தில் பேசக்கூடாது.மேலும் எம்எல்ஏ என்பதால் கருணாஸின் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் பிரதிபலிக்கும். ஹெச்.ராஜா எம்எல்ஏவாக இல்லாததால் அவரது பேச்சுக்கள் மக்களிடம் பிரதிபலிக்காது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.