“வேலுநாச்சியாரா? ஜான்சி ராணியா?” …பேச்சில் தடுமாறிய சீமான்! கலாய்த்த இயக்குநர் ரத்னகுமார்!

அவர் எனக்கு எதிராகவே வேலை செய்தாலும் நான் அவரை ஆதரிப்பேன் என முன்னதாக பேசி இருந்த சீமான் தற்போது விஜயை விமர்சித்து பேசி இருக்கிறார்.

Seeman - Rathnakumar

சென்னை : நாம் தமிழர் கட்சியின் சார்பாக நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தார்.

அதில் குறிப்பிட்டுச் சொன்னால், விஜய் தனது ஒரு கொள்கைத் தலைவர்களில் ஒருவராக வேலு நாச்சியாரை வைத்துள்ளார். அதனைக் குறித்துப் பேசிய சீமான், “தவெக மாநாட்டில் வைத்த கட் அவுட்டில் இருக்கும் படமே, நான் வரைந்தது எனவும், நான் அரசியலுக்கு வந்த பிறகுதான் சேர, சோழ, பாண்டியன், அழகு முத்துக்கோன் உள்ளிட்டோரை மக்களுக்குத் தெரியும் என்றும் கூறினார்.

மேலும் வேலுநாச்சியாரின் கட் அவுட் வைத்த விஜய்க்கு அவரது வரலாறு தெரியுமா? எனக் கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து பேசிய சீமான், “யார் வேலு நாச்சியார் தெரியுமா? கணவர் உடல் மீது சத்தியம் செய்து கைக்குழந்தையைத் தோளில் உப்பு மூட்டை போலக் கட்டிக்கொண்டு இழந்த நிலத்தை நான் மீட்டே தீருவேன் என்று உறுதி எடுத்துச் சென்று வென்று முடித்த வரலாறு தான் தமிழின வரலாறு”, எனக் கூறி இருந்தார்.

ஆனால், ‘இது தவறான வரலாறு’ என்றும் ‘சீமான் கூற வருவது ஜான்சி ராணியின் வரலாறு’ என்றும் நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலையில், ‘மேயாத மான்’, ‘ஆடை’ திரைப்படத்தின் இயக்குநரான ரத்ன குமாரும் சீமானை கலாய்க்கும் விதமாகத் தம்பி ராமையாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் ஏற்கனவே விஜயின் ரசிகர் என்பதால் அவரது பதிவு வைரலாக பரவி வருகிறது. அவரைத் தாண்டி மேலும் பல நெட்டிசன்கள் சீமானைக் கலாய்த்து வருகின்றனர். மேலும், ‘வேலு நாச்சியார் தனது கணவர் இறந்து 8 ஆண்டுகள் பிறகு தான் வெள்ளையர்களிடம் போர் புரிந்தார்’ எனவும் நெட்டிசன்கள் அவர்களது கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்