ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைப்பு ...!

Railway station walk fare has been reduced to 10 rupees.

ரயில் நிலைய நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிக அளவில் பரவி நேரம், மக்கள் அதிகளவில் ரயில் நிலையத்தில் கூடுவதை தவிர்க்கும் விதமாக ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டது. இதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டது.

இதனால் ரயில் நிலைய நடைமேடை கட்டணம் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்பொழுது சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில் மீண்டும் நடைமேடை கட்டணம் பத்து ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.