சென்னை : சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவுகளாக கற்களை வீசி மோதிக்கொண்ட சம்பவத்தில் மின்சார ரயில் ஜன்னல் கண்ணாடி உடைந்து ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த 2 பயணிகள் காயம் அடைந்தனர். இதனையடுத்து, மாம்பலம் ரயில்வே போலீசார் மின்சார ரயிலில் கல்வீச்சு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த கண்ணன், வேலவன், கத்தி வைத்திருந்த ஹரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மூவரையும் காவல் நிலைய ஜாமினிலேயே […]
சென்னை : திமுக அரசை கண்டித்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். கடிதம் மூலம் ரயில் நிலையங்களுக்க வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்த செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எழும்பூர் ரயில் நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதத்தில், “பாமகக்கு எதிராக திமுக செயல்படுவதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகவே பள்ளிகள் மற்றும் விமான […]
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என ரயில்வே பொதுமேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, வண்டலூா் – ஊரப்பாக்கம் இடையே ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றனர். தற்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்படவுள்ள ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் முடிவடையும் என ரயில்வே பொதுமேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், […]
இன்று முதல் நடைமேடை கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. சாதாரணமாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பார டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்ந்துள்ளளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 1 முதல் ஜனவரி 31, 2023 வரையில் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் […]
ரயில் நிலைய நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிக அளவில் பரவி நேரம், மக்கள் அதிகளவில் ரயில் நிலையத்தில் கூடுவதை தவிர்க்கும் விதமாக ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டது. இதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டது. இதனால் ரயில் நிலைய நடைமேடை கட்டணம் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்பொழுது சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் […]
தாம்பரம் ரயில் நிலையத்தின் கிழக்கு தாம்பரம் நுழைவு வாயில் அருகே மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை. தனியார் கல்லூரியில் படித்து வரும் 22 வயதான ஸ்வேதா என்பவர் அவரின் ஆன் நண்பர் ராமச்சந்திரன் என்பவருடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. திடீரென ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு, அவரும் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இருவரும் அங்கு ரத்த […]
தெற்கு ரயில்வேயில் முதன் முறையாக கோவை ரயில் நிலையத்துக்கு பசுமைக்கான பிளாட்டினம் சான்று வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏ 1 தர மற்றும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள ரயில் நிலையங்கள் பசுமை சான்றிதழ் பெற வேண்டும் என கடந்த 2018 ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூர், திருவனந்தபுரம், திருச்சூர், எர்ணாகுளம், மதுரை, கோவை, கோழிக்கோடு ஆகிய ரயில் நிலையங்கள் ஏ […]
சென்னையில் உள்ள தாம்பரம் ரயில் நிலைய பணிமனை வளாகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை சென்னை தாம்பரம் ரயில் நிலைய பணிமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அருகில் இருந்த ரயில்வே பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 45 நிமிடங்கள் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்துக்கான காரணங்கள் […]
அசாமில் கொரோனா சோதனையைத் தவிர்ப்பதற்காக ஜாகிரோட் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் தப்பி ஓட்டம். இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் இதனை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாத மக்கள் பலர் இன்னும் பயந்து எந்த வித பரிசோதனையோ அல்லது தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கோ முன் வர மறுக்கின்றனர். இதனையடுத்து திங்கள்கிழமை (மே 24) அசாம் மாநிலத்தில் குவஹாத்தி நகரில் கொரோனா சோதனையிலிருந்து தப்பிக்க […]
தமிழக அரசு நாளை முதல் இரவு நேர ஊரங்கை அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 10,723 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யபட்டுள்ளது.மேலும்,நேற்று ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால்,தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுபடுத்த நாளை முதல் இரவு 10 மணியிலிருந்து காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது.மேலும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை […]
இந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரு கே.எஸ்.ஆர். ரயில் நிலையத்தில் கன்னட நவ நிர்மான் சேனா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு சமீப காலமாக அனைத்து மாநிலங்களிலும் இந்தியை திணிப்பதாக அரசியல் காட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினை சேர்த்தவர்கள் குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் திமுக எம்பி கனிமொழி முன்னெடுப்பின் பேரில், இந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி சட்டைகளை அணிந்து பல திரைப்பட பிரபலங்கள் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இதையடுத்து, தமிழகம் […]
டெல்லி ரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசமாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசமாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இந்த ரயில்வே நிலையத்தில் இயந்திர மூலம் உடற்பயிற்சி மேற்கொண்டால் இலவசமாக டிக்கெட் என்ற முறை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. हम फिट तो इंडिया फिट एक्सरसाइज से हों फिट, मुफ्त मिले प्लेटफार्म टिकिट To […]
ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மற்றும் தீவிரவாதிகள் நுழையவுள்ளதாக தகவல். குர்லா விரைவு ரயிலில் இருந்து இறங்கி வந்த இளைஞர் ஒருவர் முரண்பாடாக தகவலை தெரிவித்ததால் சந்தேகமடைந்த ரயில்வே போலீசார் அவரை கைது செய்தனர். ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மற்றும் தீவிரவாதிகள் நுழையவுள்ளதாக வெளியான தகவலையடுத்து ரயில் நிலையத்தில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை ஈரோடு ரயில்நிலையத்திற்கு வந்த குர்லா விரைவு ரயிலில் இருந்து இறங்கி வந்த இளைஞர் ஒருவர் […]
மும்பையில் உள்ள மன்கரட் -கோவண்டி ரயில்வே நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தில் ரயில் மோதி வயதான ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் யார் என விசாரித்தபோது ,அங்கிருந்தவர்கள் இவர் ஆசாத் எனவும் இவர் ரயில் நிலையத்திற்கு அருகே பிச்சை எடுப்பவர் என கூறினார். இதை அடுத்து ரயில் நிலையத்திற்கு அருகே உள்ளஒரு குடிசையில் அவர் வசித்து வந்தது என்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் அந்த குடிசையிலிருந்து நான்கு பெரிய […]
மும்மையில் உள்ள லோக்கல் ரயிலில் கடந்த 4-ம் தேதி கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்தார். கடந்த சில வாரங்களாக மும்பையில் கன மழை பெய்து வருகிறது. கடந்த 4-ம் தேதி மும்பையில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. கன மழையால் தண்டவாளங்களில் வெள்ளம் சென்றதால் அப்பெண் பயணம் செய்த லோக்கல் ரயில் விரார் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது அப்பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டது.இதை தொடர்ந்து அவரது கணவர் மருத்து வமனைக்கு செல்ல […]
புட்டிரெட்டிப்பட்டியில் உள்ள ரயில் நிலயத்தை கடந்து செல்ல மேம்பாலம் வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ளது பாப்பிரெட்டிப்பட்டி. இங்கே இருக்கும் புட்டிரெட்டிப்பட்டியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ரயில் நிலையம் செயல்பட்டு வருகின்றது.இந்த ரயில் நிலையம் வழியாக பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இந்நிலையில் அந்த ரெயில் வழித்தடத்தில் ஒரு சில நேரங்களில் நீண்ட நேரம் ரயில்கள் தொடர்ந்து நிற்பதால் பொதுமக்கள் பாதையை கடந்து செல்ல மிகப்பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.காலை நேரங்களில் மட்டும் பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு […]
நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகைகள் வழங்க உள்ளது. நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு சலுகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு விமான நிலையம், ரெயில் நிலையம், சுங்கச்சாவடியில் முன்னுரிமை சேவை வழங்கப்படும். வருமான வரியை எத்தனையோ பேர் நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர். ஒழுங்காக வரி செலுத்துகிறவர்களோ, ஏமாற்றுகிறவர்களுக்கு மத்தியில் ஒழுங்காகவும், நேர்மையாகவும் நாங்கள் வரி செலுத்துவதால் எங்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது என்று ஆதங்கப்படுகிறார்கள். இந்த […]
கோவை மாவட்டம் மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் ஒன்றாகும்.நகர் முழுவதும் சாலைகளிலும் ,சாலை ஓரங்களிலும் நெரிசல் மிகுந்து காணப்படும்.இதனால் கோவை ரயில் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை அகற்ற போலீஸார் நெருக்கடி தருவதாக ஆட்டோ டிரைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். முன்னதாக கோவை சந்திப்பு ரயில் நிலைய வளாகத்திற்குள் ஆட்டோ ஸ்டாண்ட் இருந்தது. ஆனால் பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி சிறிது காலம் வெளியேறுமாறு அதிகாரிகள் கூறினர். இதனை நம்பி ரயில் நிலைய வளாகத்தில் இருந்து வெளியே […]
ரயில் பயணிகள் அதிகமாக செல்லும் மாநகரங்களின் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது, சேலம் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், சேலம் ரயில் நிலையத்தில், 5 நடைமேடைகளிலும் இலவச வைஃபை வசதி ஏற்படுத்த நிர்வாகம் முடிவு செய்து இருந்தது. அதன் படி இன்று முதல் சேலம் வைஃபை வசதி செயல்படும் என நிர்வாகம் அறிவித்ததுள்ளது. source : dinasuvadu.com