ரயில் நிலைய நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிக அளவில் பரவி நேரம், மக்கள் அதிகளவில் ரயில் நிலையத்தில் கூடுவதை தவிர்க்கும் விதமாக ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டது. இதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டது. இதனால் ரயில் நிலைய நடைமேடை கட்டணம் 50 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்பொழுது சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் […]
ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் மாற்றியமைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய ஏடிஎம் கார்டு பெறுவதற்கு ரூ.300 கட்டணம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் கணக்கு உள்ள வங்கி கிளையில் டூப்ளிகேட் ரகசிய எண் (pin) பெறுவதற்கு ரூ.50 செலுத்த வேண்டும். மெட்ரோ நகரங்களில், […]
தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கு 85% கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என்று சென்னை உயர்நதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்ததை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கு 85% கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்டண […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கரூரில் இருக்கும் நூலகத்தை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் நூலகத்தின் வசதிகள் மற்றும் பள்ளிகளில் இருக்கும் பாதுகாப்பான சூழல் குறித்து ஆய்வில் மேற்பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று கூறினார். அதனை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் நீதிமன்ற வழிகாட்டுதல் படி கட்டணம் […]
கல்விக் கட்டணத்தை செலுத்தும் விவகாரத்தில் மாணவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க பல்கலைக் கழகங்களுக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. ‘நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், யுஜிசி.யின் உத்தரவின் படி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடை விதிக்க முடியாது என்று கடந்த 28ந் தேதி உத்தரவிட்டது. அதே போல் பல்கலைக் கழங்கங்கள், கல்லூரிகள் விருப்பப்பட்டால் முதலாம், 2ம் ஆண்டுக்கான இறுதி தேர்வுகளையும் நடத்திக் கொள்ளலாம் என்ற ஒரு உத்தரவையும் […]
மகாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 3,08,507 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8893 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மஹாராஷ்டிராவில், கொரோனா பரிசோதனைக்கண் கட்டணத்தை அம்மாநில அரசு பாதியாக குறைத்துள்ளது. அதன்படி, பரிசோதனை கட்டணம் ரூ.4,400-ல் இருந்து ரூ.2,200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து […]
தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால், 31,667 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 269 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், ‘தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை வசூலித்தல், […]