நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.
தமிழகத்தில் நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு வேளாண்மைக்கு சாதகமான சூழல் நிலவுவதால் நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்கி வேண்டும் என்றும் அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு பதில் செப்டம்பர் 1-ஆம் தேதியே நெல் கொள்முதலை தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு உரிய அறிவுறுத்தல் வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.
unknown node