அன்புமணிக்கு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ்.!

பாமக நிறுவனர் ராமதாஸ் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தொடர்பாக அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Anbumani Ramadoss

சென்னை :பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அன்புமணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்காவிட்டால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி தரப்பு இந்த நோட்டீசுக்கு பதிலளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நோட்டீஸ் பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது, மேலும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் மைக்கை தூக்கி எறிந்து குழப்பம் ஏற்படுத்தியது. ராமதாஸ் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் குறித்து சமூக ஊடகங்களில் தவறான செய்திகளைப் பரப்பியது.

தைலாபுரத்தில் ராமதாஸின் இருக்கை அருகே ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது.ராமதாஸின் அனுமதியின்றி பொதுக்குழு கூட்டி, அவரை அவமதித்தது. பசுமை தாயகம் அமைப்பு மற்றும் மக்கள் டிவியை அபகரித்தது என அடுக்கடுக்காய் ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.