சென்னை : பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும் நிலையில், மழைநீரை உடனடியாக அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், பாமக நிறுவனம் ராமதாஸ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” சென்னையில் இன்று காலை 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ அளவுக்கு மட்டுமே மழை பொழிந்துள்ளது. 6 செ.மீ மழைக்கே […]
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. திமுக எம்எல்ஏ புகழேந்தி உயிரிழந்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, எதிர்த்து போட்டியிட்ட பாமக, நாதக வேட்பாளர்களை விட கூடுதலாக 67,169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, திமுக – 1,24,053 பாமக – 56,296 நாதக – 10,602 வாக்குகளை பெற்றுள்ளனர். 67,757 வாக்குகள் […]
PMK: வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வளவு காலம் தாழ்த்துவாய்? என திமுக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு விரும்பவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அளிக்க இதுவரை வழங்கப்பட்ட […]
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு தேர்தல் குழு அமைத்தல் உள்ளிட்டவைகள் தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் திமுகவின் கூட்டணி ஒருபக்கம் வலுவாக இருந்தாலும், மறுபக்கம் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி […]
தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்துள்ளது இலங்கை கடற்படை , நெடுந்தீவு அருகே ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இரண்டு படகுகளுடன் அனைவரையும் கைது செய்து, காங்கேசன் துறைமுகம் அழைத்து சென்றுள்ளது. சுமார் 100க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் […]
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முரசொலி நிலம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாக கூறி திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளையின் அலுவலகம் அமைந்திருப்பதாகவும், அந்த இடத்தின் மூல பத்திரத்தை வெளியிட வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அடிப்படை ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டை முன்வைத்ததாகக் கூறி, பாமக […]
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 147 கல்லூரிகளில் 2022-23ல், பட்டப்படிப்பை முடித்த 50,000 மாணவர்களுக்கு உடனடியாக தற்காலிக சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உயர்கல்வி, வேலை கிடைத்தும் சேர முடியவில்லை: 50 ஆயிரம் மாணவர்களுக்கு உடனடியாக தற்காலிக பட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!” அடுத்த ஒரு மாதத்தில் 152 புதிய மருத்துவமனைகள்… அமைச்சர் […]
Caste Census: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக உடனடியாக கலந்தாய்வைத் தொடங்கி கொள்கை முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பாரதிய ஜனதா எதிரி அல்ல, அதேநேரத்தில் அது குறித்து விரிவான கலந்தாய்வுகளை நடத்திய பிறகு தான் சரியான முடிவை எடுக்க முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அது மக்களிடையே சாதி வேறுபாட்டை அதிகரிக்கச் […]
தமிழ்நாட்டின் இழந்த உரிமைகளை மீட்டெடுத்து, முதன்மை மாநிலமாக உயர்த்த, தமிழ்நாடு நாளில், தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின் அடிப்படையில் சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தான் உண்மையான தமிழ்நாடுநாள். இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அதை […]
சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பல தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுகியிருந்தார். அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் பாமக சார்பிலும் சமூக நீதியை காப்பதற்காக சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னை தி.நகரில் […]
சமீப காலமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கோடியக்கரை அருகில் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது உடைமைகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து டாக்.ராமதாஸ் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில், தமிழக மீனவர்களைத் தாக்கி பொருள்கள் கொள்ளை: இலங்கை கடற்படையினரின் […]
ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு தமிழ்நாட்டில் 39வது பலி நிகழ்ந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் சூதாட்ட அரக்கனுக்கு தமிழ்நாட்டில் 39வது பலி நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியான பிறகு தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தமிழக ஆளுநர் 73 நாட்களாகியும் […]
தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால் வெளிச்சந்தையில் கரும்பு விலை வீழ்ச்சியடையும் என ராமதாஸ் எச்சரிக்கை. பரிசுத் தொகுப்பில் பொங்கல் கரும்பு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் தமிழர் திருநாளையொட்டி, அரிசி அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசு அளிக்கவிருக்கும் பரிசுத் தொகுப்பில் பொங்கல் கரும்பு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. கரும்பு உழவர்கள் நலனை கடுமையாக பாதிக்கும். தமிழ்நாட்டில் கடந்த சில […]
கடந்த காலங்களில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என பாமக ராமதாஸ் தகவல். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் ஜப்பானில் 1.85 லட்சம், கொரியாவில் 87,559, பிரான்சில் 71,212, ஜெர்மனியில் 52,528 உட்பட உலகம் முழுவதும் 5,59,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா புதிய அலை கவலையளிக்கிறது. கடந்த காலங்களில் கொரோனாவால் மிக […]
முதன்மை தேர்வுகளுக்கும் இடையே 9 மாத இடைவெளி மிகவும் அதிகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட். டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும். நவம்பர் மாதத்தில் முதல் நிலைத் தேர்வு, 2024 ஜூலையில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது, டி.என்.பி.எஸ்.சி அடுத்த ஆண்டு மிகக்குறைந்த […]
எதற்காக இந்த நடவடிக்கையோ, அந்த இலக்கை எட்ட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என டாக்.ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு டாக்.ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக கஞ்சா வேட்டை 3.0 நடைபெற்றுவருவதாகவும், 403 கஞ்சா வணிகர்கள் கைது […]
மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுகள் என ராமதாஸ் ட்வீட். நேற்று மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்.ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மாண்டஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றிருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் பெரும்பான்மையான மக்கள் அச்சத்திலிருந்து […]
தமிழகத்துக்கு 7 கல்லூரிகள் வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை. கடலூர் மற்றும் மருத்துவ கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் 7 மருத்துவ கல்லூரிகளை மத்திய அரசு ஒதுக்க, தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். மத்திய அரசின் சார்பில் இதுவரை மூன்று கட்டங்களாக 157 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 93 மருத்துவக் கல்லூரிகள் […]
எதிர்கால பாதிப்புகளை சமாளிக்க பயிர்க்காப்பீடு அவசியமாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல். சம்பா பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை 2 வாரங்கள் நீடிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைவதாக தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது. காப்பீடு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானது அல்ல. தமிழ்நாட்டில் சம்பா நடவு மற்றும் விதைப்புப் […]
னைத்து நிலைகளிலும் சமூகநீதியை காப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என ராமதாஸ் ட்வீட். அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்த சட்டம் இயற்ற சட்ட வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் அரசு பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட வல்லுனர் குழுவை […]