கொறடா பரிந்துரைப்படி விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்ப மாட்டார்கள்...!தினகரன் ஆதரவு எம்எல்ஏ தகவல்

பொதுத்தேர்தலோ, இடைத்தேர்தலோ எது நடந்தாலும் டிடிவி அணி வெல்வது உறுதி என்று கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில்

பொதுத்தேர்தலோ, இடைத்தேர்தலோ எது நடந்தாலும் டிடிவி அணி வெல்வது உறுதி என்று கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தெரிவித்துள்ளார்.18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் செப்டம்பர் 25 ஆம் தேதி சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.

unknown node

இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேரிடம் விளக்கம் கேட்க அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.டிடிவி தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்க அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரிடம் கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

unknown node

இந்நிலையில் விழுப்புரத்தில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பொதுத்தேர்தலோ, இடைத்தேர்தலோ எது நடந்தாலும் டிடிவி அணி வெல்வது உறுதி.கொறடா பரிந்துரைப்படி விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்ப மாட்டார்கள்.அனுப்பினால் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும்  கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தெரிவித்துள்ளார்.