நாளை மோடியின் 'ரோடு ஷோ'...போலீசார் கட்டுப்பாட்டில் கோவை!

PM Modi: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக பேரணி கோவையில் நாளை மாலை நடைபெற உள்ளது. இதற்காக நாளை மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவை வருகிறார்.

pm modi

PM Modi: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக பேரணி கோவையில் நாளை மாலை நடைபெற உள்ளது. இதற்காக நாளை மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவை வருகிறார்.

READ MORE –துடைப்பம் எங்ககிட்ட தான் இருக்கு..! பிரதமர் மோடி விமர்சனத்துக்கு பதிலடி

நாளை மாலை 5:45 மணியளவில் கோவை சாய்பாபா காலனியில் பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’ தொடங்கி, மாலை 6.45 மணியளவில் ஆர்.எஸ்.புரத்தில் நிறைவு பெறுகிறது. பேரணியில் பங்கேற்ற பின், நாளை இரவு கோவையில் தங்கும் பிரதமர் மோடி மறுநாள் செவ்வாயன்று காலை பாலக்காடு பயணம் மேற்கொள்கிறார்.

READ MORE –மக்களவை தேர்தல்..! தேமுதிக தலைமை வெளியிட்ட அறிவிப்பு

இந்நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி, சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

READ MORE –எம்மாடியோ….வெப்பத்தை தணிக்க வருகிறது கோடை மழை.!

7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில், முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டின் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த ஒன்றரை மாதங்களில் ஐந்து முறைக்கு மேல் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.