தூத்துக்குடியில் கோயில் இடிக்க எதிர்ப்பு.. பொதுமக்களுடன் எம்எல்ஏ சாலை மறியல்..!

Default Image

தூத்துக்குடியில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனி சாலையோரத்தில் விநாயகர் கோயில் ஓன்று அமைந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அங்கு வாறுகால் அமைக்கப்பட்டு வருகிறது. விநாயகர் கோயில் அமைந்துள்ளதால், அதனை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து, இன்று காலை ஜேசிபி இயந்திரம் மூலம் கோயிலை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் வந்தனர். இதனால், அப்பகுதி மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த திமுக எம்.எல்.ஏ  கீதாஜீவன் மக்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோயில் அகற்றப்படாது என உறுதியளித்தால் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் தொலைபேசி மூலம் எம்எல்ஏ கீதாஜீவனிடம் பேசினார்.

அப்போது, கோயில் இடிக்கப்படாது என தெரிவித்தார், பின்னர் போராட்டம் கைவிடபட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்