"ஒரு வாரம் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம்" – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

ஒரு வார கால அரசு முறைப் பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு நாளை புறப்படுகிறார்.

MK Stalin - TN Govt

சென்னை :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு ஆகஸ்ட் 30, 2025 முதல் செப்டம்பர் 8, 2025 வரை வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ இல்லத் திருமண விழாவில், கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து, மேடையில் பேசுகையில், தனது வெளிநாட்டு பயணம் குறித்து அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டுக்கு ரூ. 10 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப் படத்தை நான் திறந்து வைக்கிறேன். அறிவு மேதையான தந்தை பெரியாரை உலக அளவில் அங்கீகரிப்பது தமிழ்நாட்டுக்குப் பெருமைவாக்காளர் பட்டியலில் பிஹாருக்கு ஏற்பட்ட நிலைமை தமிழ்நாட்டுக்கு ஏற்படக் கூடாது என்றார்.

இந்தப் பயணத்தின் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆகஸ்ட் 30 அன்று சென்னையிலிருந்து ஜெர்மனி செல்லும் முதலமைச்சர், அங்கு அயலக அணி நிர்வாகிகளைச் சந்தித்து பேசுவார்.

பின்னர், செப்டம்பர் 1 முதல் 7 வரை லண்டனில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார், இதில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அயலகத் தமிழர் நல வாரிய நிகழ்ச்சியும் அடங்கும். செப்டம்பர் 8 அன்று சென்னை திரும்புவார்.

இதற்கு முன்பு, 2022ல் துபாய், 2023ல் சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.