சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் முன்மாதிரி டிஜிபி சைலேந்திரபாபு – அமைச்சர் சேகர்பாபு பாராட்டு

Minister Sekarbabu praised the DGP for maintaining Tamil Nadu as a park of peace.

தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக நிலை நிறுத்தி கொண்டு இருப்பவர் டிஜிபி என அமைச்சர் சேகர்பாபு பாராட்டு.

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் இந்திய துணைக் கண்டத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்து, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக நிலை நிறுத்தி கொண்டு இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பாராட்டு தெரிவித்தார். இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தீவிரவாத மதவாதத்திற்கு இடம் தராமல் செயலாற்றக்கூடிய காவல்துறை தலைவரை முதல்வர் தமிழகத்திற்கு அளித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணிக்காக உலக அளவில் பாராட்டு பெற்றது தமிழக காவல்துறை என தெரிவித்தார். இதனிடையே, மனசாட்சி இல்லாதவர்கள் கூட அண்ணாமலை போல காவல்துறையை பற்றி பேச மாட்டார்கள் என தமிழக காவல்துறை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு நேற்று பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.