மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று உறுதி. தந்தையைப் போல ஸ்டார் அந்தஸ்தில் தமிழ், மலையாளத்தில் ஜொலித்து வரும் நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் துல்கர் சல்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்துக் கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இந்த தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு […]
நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல். டெல்லி நாடாளுமன்ற ஊழியர்கள் 1,409 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 402 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4-ஆம் தேதி எடுக்கப்பட்ட பரிசோதனையில் 402 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான ஊழியர்களின் மாதிரிகள் ஓமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், 402 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு. இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை நடைபெறவிருந்த ஆதி திராவிட நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் / காப்பாளர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆதி திராவிட நலத்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்த நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடத்துகிறது தேர்தல் ஆணையம். அதன்படி, உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் […]
தமிழகத்தில் மதுபான கடைகள் ஜனவரி 15, 18, 26 -ஆம் தேதிகளில் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஜனவரி 15, 18, 26 -ஆம் தேதிகளில் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 15 – திருவள்ளூர் தினம், 18 – வடலூர் ராமலிங்கர் நினைவுநாள், 26 – குடியரசு தினம் என்பதால் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இந்த 3 நாட்கள் செயல்படாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
17 வயது சிறுமியின் 6 மாத கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது. 17 வயது சிறுமியின் 6 மாத கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கியுள்ளது. சிறுமியின் சம்மதத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் கருவை கலைக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் வழக்கை விசாரித்து 2 மாதங்களில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தடய அறிவியல் சோதனை மூலம் கர்ப்பத்துக்கு காரணமானவரை உறுதி செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற […]
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பனி வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்போவதாக தமிழக அரசு தகவல். அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப்பணியாளர் பிரச்சனை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. மக்கள் நலப்பணியாளர்கள் பிரச்சனை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்போவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொள்கை முடிவு தொடர்பாக ஆலோசனைகளுக்கு நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது. இதனால் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பனி வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்போவதாக […]
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட எந்த தடையுமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 15 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 121 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 528 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகள் ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவா மாநிலத்தில் ஜன.26-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவு. கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக கோவாவில் இன்று முதல் 26-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவுநேர […]
மதிமுக இளைஞர் அணி செயலாளராக ப.த.ஆசைத்தம்பியை நியமனம் செய்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாநில இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அதன்படி, மதிமுக இளைஞர் அணி செயலாளராக ப.த.ஆசைத்தம்பியை நியமித்து பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மேலும், மதிமுக மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆசைத்தம்பி விடுவிக்கப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
நாளை முதல் உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் மட்டுமே விசாரணை என அறிவிப்பு. நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் நேரடி விசாராணை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் நாளை முதல் அடுத்த 2 வாரங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்ற பதிவுத்துறை இந்த முடிவு எடுத்துள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி. அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அணியில் உள்ள மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளதாக PSG கால்பந்து க்ளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள லியோனல் மெஸ்ஸி மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டு தனிமையில் உள்ளதாக கூறப்படுகிறது. Tests carried out during the winter break and before the resumption of […]
2021-22ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம். UG & PG பொறியியல் படிப்புகளில் தொடக்கம் முதல் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிரிவு வாரியாக முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் & சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. வழக்கம் போல் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களே அதிகளவில் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி, குஜராத்துக்கு ஒரு நீதியா? என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி. இதுகுறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்துக்கு வருவதும் இல்லை, தருவதும் இல்லை. குஜராத்தில் புயல் என்றால் நேரில் சென்று 1000 கோடி அறிவிக்கிறார் பிரதமர். தமிழ்நாடு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எட்டிப் பார்க்காதது ஏன் தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி, குஜராத்துக்கு ஒரு நீதியா? என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்துக்கு வருவதும் […]
சென்னை புறநகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவரை கண்காணிக்க சிறப்பு படை அமைப்பு. சென்னை புறநகர் பகுதிகளில் கட்ட பஞ்சாயத்துகளை தடுக்க சிறப்பு படை அமைத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைத்தது காவல்துறை. தொழிற்சாலை பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்காணிக்கவும் சிறப்பு படைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தருவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக […]
பெரியகுளம் தாலுகாவில் பல ஏக்கர் அரசு நிலம் மோசடி தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம். தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் 3 கிராமங்களில் பல ஏக்கர் அரசு நிலம் மோசடி தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை போலியாக தனியாருக்கு பட்டா மாறுதல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. உதவி ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் […]
தஞ்சை மாவட்ட திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தஞ்சாவூர் மூப்பனார் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் 11 அடி உயரமுள்ள முழு உருவச்சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.237 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை நாளை முதலமைச்சர் வழங்குகிறார்.
ஓமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரகம் பயணம் ஒத்திவைப்பு. ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லவிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. துபாய் எக்ஸ்போவில் (கண்காட்சி) பங்கேற்பதற்காக ஜனவரி 6-ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்லவிருந்த நிலையில், தற்போது பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடிக்க தடை. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாட வனத்துறை தடை விதித்துள்ளது. பட்டாசு சத்தத்தால் வனவிலங்குகள் அச்சமடையும் என்பதால் தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் காணொலி வாயிலாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, துணைவேந்தர்களுடன் காணொலி வாயிலாக தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி, ஆராய்ச்சி& மேம்பாடு, கற்றல் அடைவு திறன் மேம்பாடு, உலகளாவிய தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தல், தேசிய கல்வி கொள்கை அமலாக்கம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.