"திமுக ஆட்சி மக்கள் மன்றத்தில் வலுவாக உள்ளதாக அண்ணாமலையே பேசியுள்ளார்" – அமைச்சர் சேகர்பாபு!

திமுகவை வசைபாடிய அண்ணாமலையே திமுக வலுவாக இருக்கிறது என பேசியிருக்கிறார் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

EPS - sekar bapu

சென்னை :தமிழ்நாட்டின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். “அதிமுக கோமா நிலையில் உள்ளது” என்று அவர் தெரிவித்து, கட்சியின் தற்போதைய நிலையை ஒப்பிட்டு பேசினார்.

இது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான கட்சியின் உட்கட்சி பூசல்கள், தேர்தல் தோல்விகள் மற்றும் ஆழ்த்தப்பட்ட அரசியல் நெருக்கடிகளை சுட்டிக்காட்டும் வகையில் உள்ளது.

நேற்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள்தான் பெரிய முதல் கட்சிகள், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையேதான் நேரடி போட்டி, 210 தொகுதிகளுக்கு மேல் அதிமுக கூட்டணி வெல்லும்” என்று உறுதி அளித்துள்ளர்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர் சந்திப்பில் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்ற இபிஎஸ் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ”எந்த கட்சியாவது தேர்தலில் தோற்போம் என சொல்வார்களா? எங்களை வசைபாடும் அண்ணாமலை கூட மக்கள் தளத்தில் திமுக ஆட்சி வலுவாக உள்ளதாக கூறியுள்ளார்.

210 தொகுதிகளோடு நிறுத்திவிட்டார், 234 தொகுதிகளிலும் வெல்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்க வேண்டும் திமுகவை வசைபாடிய அண்ணாமலையே திமுக வலுவாக இருக்கிறது என பேசியிருக்கிறார்.