திருவண்ணாமலை : வரலாறு காணாத மழையால் திருவண்ணாமலையில் அடுத்தடுத்த இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், பரபரப்பான சூழல் நிலவியது. குறிப்பாக, வஉசி நகரில் ராஜ்குமார் – மீனா தம்பதி வீட்டின் மீது பாறைகள் உருண்டு வந்து தாக்க, உள்ளே சிக்கிக் கொண்ட 5 குழந்தைகள் உள்பட 7 பேரும் மண்ணில் புதைந்தனர். நேற்று 5 பேரது சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 2 பேரின் சடலங்கள் 2 நாள்கள் கடும் போராட்டத்திற்கு பின், இன்று மீட்கப்பட்டுள்ளன. மண்ணுக்குள் சிக்கி […]
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக அரசியல் தலைவர்கள் சந்தித்ததாகவும், இது ரகசிய சந்திப்பா அல்லது அதிகாரபூர்வ சந்திப்பா என்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதில் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அவருக்கு வேறு வேலை இல்லை, தினமும் ஏதேனும் அறிக்கை வெளியிட்டு கொண்டிருப்பார். […]
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும் பாகனின் உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரையும் தாக்கியது. இதில் இருவரும் படுகாயமுற்று உயிரிழந்தனர். சாதுவாக கோயிலை சுற்றிவரும் யானை திடீரென ஆக்ரோஷமாக மாறி இருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதில் யானை பாகனின் உறவினர் சிசுபாலன் தான் யானையிடம் செல்பி எடுக்க முயன்றார். அதனால் தான் யானை அவரை தாக்கியது. எனவும் அப்போது […]
சென்னை : இன்று தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாடு முழுக்க பல்வேறு கோயில்களில் 304 இணைகளுக்கு (ஜோடிகளுக்கு) திருமணம் நடைபெற்றது. சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31 இணைகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில், அறநிலையத்துதுறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். திருமணமாகிய இணைகளுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் , ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த விழாவில் […]
சென்னை : நடிகை நமீதாவிடம் இந்து மத சான்றிதழ் கேட்ட விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்களிடம் கூறினார். தமிழகத்தில் உலகப்புகழ் பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் ஒன்றாக சாமி தரிசனம் செய்ய நேற்று சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள அதிகாரி ஒருவர் நமீதா மற்றும் அவரது கணவரிடம், அவர்கள் இந்து மதத்தை […]
திண்டுக்கல் : அறநிலையத்துறை சார்பில் இன்றும் (ஆகஸ்ட் 24) நாளையும் (ஆகஸ்ட் 25) பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழ்க் கடவுள் என போற்றப்படும் முருகன் புகழை போற்றும் விதமாக “முத்தமிழ் முருகன் மாநாடு” எனும் நிகழ்வு தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் இன்றும், நாளையும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் […]
சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னையில் 7 அமைச்சர்கள், 3 எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை தரக்கூடிய வடகிழக்கு பருவமழையானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் ஆரம்பித்து ஜனவரியில் நிறைவுபெறும். குறிப்பாக கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் பாதிப்பை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை (முழுவதும்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, […]
சென்னை: வடசென்னை பகுதிக்கு மட்டும் 4,181 கோடி ரூபாய்க்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழக அரசு வடசென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்தும் அதற்கு அரசு ஒதுக்கிய நிதி குறித்தும் பல்வேறு தகவல்களை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்கள் மத்தியில் கூறினார். அவர் கூறுகையில், வடசென்னை பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அனைத்து துறைகளையும் அரசு ஒன்றிணைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது . வடசென்னை பகுதி மேம்பாட்டு […]
சென்னை: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டது. இதனை நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த புகைப்பட கண்காட்சி முடிந்ததும், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் 3 நாள் கன்னியாகுமரி பயணம் பற்றியும், அது தொடர்பான வீடியோ […]
Election2024 : முதல்வர் எங்களை அடக்கி வாசிக்க சொன்னதன் காரணமாக தான் அண்ணாமலை போன்றோர் பேசி கொண்டு இருக்கிறார்கள். – சேகர்பாபு. இணையத்தின் வாயிலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, நமோ செயலியில் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ஊழல் இருப்பது கவலையாக உள்ளது. தமிழகத்தை பாஜக புரட்டி போடவுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சி மீதுள்ள கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என பிரதமர் மோடி அதில் கூறியிருந்தார். […]
DMK-ADMK : வட சென்னை தொகுதியில் திமுக – அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் கடும் வாக்குவாதம். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று காலை முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்து வந்தனர். அந்தவகையில், வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய […]
DMK-ADMK : வடசென்னை மக்களவை தொகுதியில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக திமுக அதிமுகவினர் இடையே வாக்குவாதம். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே (மார்ச் 28 கடைசி நாள்) உள்ள நிலையில், இன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர். வடசென்னை மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோரும் […]
Udhayanidhi Stalin – கடந்த வருடம் 20203 செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதானத்தை கொரோனா, மலேரியா, டெங்கு போல ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அந்த நிகழ்வில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவும் உடன் இருந்தார். Read More – ஆமாம், இது குடும்ப ஆட்சி தான்.! பிரதமர் பேச்சுக்கு முதல்வர் கடும் விமர்சனம்.! இது போல, பல்வேறு மேடைகளில் திமுக எம்பி […]
இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் நாள் கூட்டம் காலையில் தொடங்கியது. அப்போது பல்வேறு துறை அமைச்சர்கள், உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தனர். அப்போது அறநிலையத்துறை குறித்து உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதாவது கோயில் காணிக்கையாக செலுத்தப்படும் நகைகள் உருக்குதல் பற்றிய விவரங்கள் கேட்டிருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : கலைஞர் பெயர் வைத்தது தான் ஒரே காரணம்.! சேகர்பாபு பரபரப்பு… அதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார். அவர் கூறுகையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் […]
சென்னை புறநகர் பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இன்று புதிய காவல் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டிருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதியதாக மலிவு விலையில் தரமான உணவகங்கள் அமைக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். […]
மத்திய அரசு மத, இன ரீதியான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது சுமத்த பார்க்கிறது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றசாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது, அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை வைத்து இன, மத பிரச்னைகளை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் அமைதிய சீர்குலைத்து கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். மத, இன ரீதியான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது மத்திய அரசு சுமத்த பார்க்கிறது. உரிய அனுமதி எதுவும் பெறாமல் […]
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில்” நாளை அயோத்தி கோயில் குடமுழுக்கு நேரலையை கோவில்களில் ஒளிபரப்பவும், சிறப்பு பூஜைகள் நடத்தவும் காவல்துறையை அனுமதி மறுப்பது கண்டத்துக்குரியது. அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை நடத்த நாளை அனுமதிக்கப்படவில்லை, பந்தல்களை அகற்றுவோம் என ஏற்பாட்டாளர்களை காவல்துறை மிரட்டுகிறது. […]
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த வருடம் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் ஆரம்ப நாட்களில் பக்த்ர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததாலும், சாமி தரிசனம் செய்யாமல் பலர் சன்னிதானத்தில் இருந்ததாலும் கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் செல்வதால் […]
தென்மாவட்ட கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டன . தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி வந்திருந்தார். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபின்னர் பேசுகையில், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அதைப்போல சென்னையை தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் கோவில்கள் மற்றும் வீடுகள் என பல சேதமடைந்தது. அதுமட்டுமன்றி இதில் சில மாவட்டங்களில் வெள்ளத்தால் சில மக்கள் உயிரிழக்கவும் செய்தனர். இதனையடுத்து, மழையால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், சேதமடைந்த குடிசைக்கு தலா ரூ.10,000, தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழை வெள்ளம் […]