ரோஜா விற்பனை களைகட்டியது…. காதலர் தினத்தை முன்னிட்டு விற்பனை செம ஜோர்….
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் காதலர் தினத்தையொட்டி ரோஜா விற்பனை களைகட்டியுள்ளது.
உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், காதலர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பரிசுகளை கொடுப்பது வழக்கம். குறிப்பாக ரோஜா எப்போதுமே காதலர்களின் முக்கியத் தேர்வாக உள்ளது. இதனால் ரோஜா பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி பிரசித்தி பெற்ற தோவாளை பூச்சந்தையில் ரோஜா பூக்களின் விற்பனை களைகட்டி உள்ளது. இதற்காக பெங்களூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விதவிதமான ரோஜாப்பூக்கள் குவிந்துள்ளன. நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் ரோஜா பூக்களை வாங்கி செல்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.