சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (01-01-2025) சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி […]
சென்னை : தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் (10.06.2024) நாளையும் (11.06.2024) ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான […]
கன்னியாகுமரி மக்களவை தொகுதி: 5 -வது சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 123284 வாக்குகள் பெற்று 47611 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அதற்கு அடுத்தபடியாக, பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக) – 75673 வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். மேலும், பசிலியான் நசரேத் (அதிமுக) – 10850 வாக்குகளும் மரிய ஜெனிபர் (நாதக) – 10796 வாக்குகளுடன் பின்னடைவில் உள்ளனர்.
Congress : பிரதமர் மோடி கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்திற்கு வரும் போது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி இந்தாண்டு ஐந்தாவது முறையாக நாளை தமிழக வருகிறார். நாள் கன்னியாகுமரியில் நடைபெறும் இருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். Read More – ஈபிஎஸ்-க்கு எதிராக திமுக மான நஷ்ட ஈடு வழக்கு! இதனால், கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு […]
நாளை (ஜனவரி 8) செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ள காரணத்தால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை ஏற்கனவே பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நாளையும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் […]
லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், […]
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்து இருந்தது . அதனை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை அடுத்த 3 மணி நேரத்திற்கு பொறுத்தவரையில் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், கோயம்புத்தூர் , தேனி ஆகிய […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை வெள்ள நிவாரண நிதி ரூ.1,000 வாங்காத அல்லது விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் தமிழக அரசு நிவாரண தொகையை அறிவித்தது. அதாவது, பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் முதலமைச்சர் அவர்கள் வெள்ள […]
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா வருகின்ற 25-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டப்படுகிறது. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவித்துள்ளார். அதன்படி, கிறிஸ்துவ தேவாலயங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், கன்னியாகுமரி […]
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை- தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நிஜாமுதீன்- குமரி விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. முத்துநகர் ரயில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில் இரு மார்க்கத்திலும் ரத்து […]
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி 4 ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பின்னர் ரெட் அலர்ட் காரணமாக தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு […]
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று காலை முதல் தூத்துக்குடி, நெல்லை தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டிருந்த நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்திற்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் […]
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று காலை முதல் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையில், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 […]
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, […]
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை முதல் 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த நாளான இன்று, கன்னியாகுமரி தினம் கொண்டாட படுகிறது. இன்று 67-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இந்நன்னாளை முன்னிட்டு இன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டம் மலைக்கோட்டையின் கீழ் நாமக்கல்லில் இருந்து சேலம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாமக்கல் தாலுகாவுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இன்று (நவம்பர் 1ம் தேதி) விடுதலை நாள் கொண்டாட்டம் மற்றும் நாளை […]
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு புயல் கரையினை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் வங்ககடலில் புயல் உருவாகியுள்ள காரணத்தால் தமிழக கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழையானது தென் தமிழகம் பகுதியில் அங்கங்கே பெய்து வருகிறது. மேலும் […]
கன்னியாகுமரியில் நாளை நடைபயணத்தை தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை சென்னை வருகிறார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் 150 நாட்கள் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பொருளாதார சீர்குலைவு, வேலையில்லாத் திண்டாட்டம், சாதி, மத பிரிவினைவாதம் போன்றவற்றைக் கண்டித்தும், ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் இந்த பாதயாத்திரையை மேற்கொள்கிறார். தினமும் 20 […]
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக தகவல். கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு போன்று உடலில் வீக்கம் இருந்ததால் 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனி வார்டில் சிகிச்சை பெறும் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேரின் ரத்த மாதிரிகள் புனேவிற்கு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் […]