Live: அமலாக்கத்துறை சோதனை முதல்.. ‘கங்குவா’ திரைப்படம் வெளியீடு வரை.!

இன்று நடைபெறும் அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

Lottery Martin - Kanguva

சென்னை :சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஏற்கெனவே, கோவையில் உள்ள வீடு, அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டநிலையில், மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், உலகம் முழுவதும் 11,500 திரையரங்குகளில் வெளியாகிறது.