சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்வதால் காரணமாக விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டது. அதன்பிறகு, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் பரவலாக மழை பொலிவானது ஏற்பட்டது. இந்த நிலையில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது வலுப்பெறும் எப்போது கரையைக் கடக்கும் என இந்திய வானிலை […]
சென்னை : நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும். இன்று செங்கல்பட்டு, […]
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மற்றும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (நவ.21) விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடிக்கலாம் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதேபோல், நெல்லை மாவட்டத்தில் கனமழையினால் பள்ளிகளில் அதிகளவு மழைநீர் தேங்கி இருக்கும்பட்சத்தில் விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி […]
சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நேற்று இரவு பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் பைரன் சிங்கின் வீட்டைத் தாக்க முயற்சி செய்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மீண்டும் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இம்பால் மேற்கு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏழு மாவட்டங்களில் இணைய சேவையும் […]
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஏற்கெனவே, கோவையில் உள்ள வீடு, அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டநிலையில், மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், உலகம் முழுவதும் 11,500 திரையரங்குகளில் வெளியாகிறது.
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார் ஜார்கண்டில் முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் எஞ்சிய 38 தொகுதிகளுக்கு நவ.20ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
சென்னை : மும்பையை சேர்ந்த திரைப்பட நிறுவனத்திற்கு ரூ.1.60 கோடி பணத்தை திருப்பி செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணத்தை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என கங்குவா பட நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். அதுவரையில் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர் 12) மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், […]
சென்னை : அமெரிக்க தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் குடியரசு கட்சி வேட்பளரான டொனால்ட் டிரம்ப் தொடர் முன்னிலை வகுத்து வந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ் நியூஸ் அறிவித்துள்ளது. சுமார் 51% வாக்குகளை பெற்றுள்ள நிலையில், அவரது வெற்றி உறுதியானதாக ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெற்றி பெற தேவையான 270 […]
சென்னை : கோவையில் நகை தயாரிக்கும் பெற்கொல்லர்கள் அதிகம் வசிக்கும் கெம்பட்டி காலனியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதாவது, தங்க நகை தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்த சில மணி நேரத்திலேயே பொற்கொல்லர்கள் பட்டறைக்கு நேரில் சென்று அவர்களது கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும், அமெரிக்காவின் 47வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு, நாளை காலை முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.