சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நேற்று இரவு பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் பைரன் சிங்கின் வீட்டைத் தாக்க முயற்சி செய்ததால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மீண்டும் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இம்பால் மேற்கு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏழு மாவட்டங்களில் இணைய சேவையும் […]
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஏற்கெனவே, கோவையில் உள்ள வீடு, அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டநிலையில், மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், உலகம் முழுவதும் 11,500 திரையரங்குகளில் வெளியாகிறது.
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார் ஜார்கண்டில் முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் எஞ்சிய 38 தொகுதிகளுக்கு நவ.20ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
சென்னை : மும்பையை சேர்ந்த திரைப்பட நிறுவனத்திற்கு ரூ.1.60 கோடி பணத்தை திருப்பி செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணத்தை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என கங்குவா பட நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். அதுவரையில் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (நவம்பர் 12) மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், […]
சென்னை : வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இன்றுடன் பரப்புரை நிறைவடையுள்ள நிலையில், தங்கை பிரியங்காவுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் 15ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை : தீபாவளி பண்டிகையை ஒட்டி வந்த தொடர் விடுமுறை முடிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் ஆயிரக் கணக்கான வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அதேபோல், தாம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டையில் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து வாகனங்கள் நிற்கிறது.