கலைஞர் நினைவு தினம்: "எதிலும் தமிழ்நாடு முதலிடம்.. வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்" – மு.க.ஸ்டாலின்.!

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

mk stalin - Kalaignar

சென்னை :மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதியின் 7வது நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 7, 2025) அனுசரிக்கப்படுகிறது. அவர் கடந்த 2018 ஆகஸ்ட் 7 அன்று காலமானார். இந்த நாளில், தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்களும், அரசியல் பிரமுகர்களும் அவரது நினைவைப் போற்றி அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

சற்று நேரத்தில் சென்னையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளனர். நிறைவாக கலை­ஞர் நினை­வி­டத்­தில் மலர்­வ­ளை­யம் வைத்து அஞ்­சலி செலுத்­த உள்ளனர்.

மேலும், அண்ணா சாலையிலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அவரது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , “எதிலும் தமிழ்நாடு முதலிடம்’ எனும் இலக்கை நோக்கி வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”தலைவர் கலைஞர் – முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு. தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு. அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node