300 ஆண்டுகள் பாரம்பரியமிக்க புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-ஆவது மன்னரான ராஜகோபால தொண்டைமான் அவர்களின் 100-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.இதனால்,புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மன்னரின் திருவுருவச்சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில்,புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக,தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் முதல்வர் […]
2023ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் கலைஞர் நினைவு நூலகம் கட்டி முடிக்க திட்டம் என அமைச்சர் எ.வ. வேலு தகவல். மதுரை – நத்தம் சாலையில் 2.61 ஏக்கர் பரப்பளவில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. ஜனவரி 2ம் தேதி முதல் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மதுரையில் கலைஞர் நினைவு நூலக கட்டிடம் கட்டுமான பணிகளை பொதுபணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று […]
மதுரையில் கலைஞர் நூலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு மதுரையில் சர்வதேச தரத்தில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மதுரை புதுநத்தம் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இடத்தை முதல்வர் நேரடியாக சென்று பார்வையிட்டார். 2.6 ஏக்கர் நிலப்பரப்பில் 2 ஏக்கரில் கட்டிடம் கட்டப்படுகிறது. பின்னர், இந்த நுலக கட்டுமானத்திற்கு ரூ.99 கோடியும், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் நூல்கள் வாங்க […]
சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ்,தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில்,திட்டப்பணிகளை தயாரானதாலும்,நினைவிடப்பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் பொதுப்பணித்துறையினர் […]
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று பராமரிப்பு உதவித்தொகை வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.அதன்படி இந்த நிகழ்ச்சியில்,கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு ரூ. 1500 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை முதல்வர் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணியாற்றி […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வரும் 10ம் தேதி கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி நாளன்று,பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவும், சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும்,ஊர்வலமாக சிலைகளை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக,இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.மேலும், தடையை மீறி விநாயகர் […]
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கலைஞரின் நிழலாக தொடர்ந்தவர்,என்னைப் போன்ற பலருக்கும் வழிகாட்டி என்று எம்பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக,நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு முதலில் பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,”தலைவர் கலைஞர்,பேராசிரியர் அன்பழகன் இடத்தில் துரைமுருகன் உள்ளார்.அவர் பொன்விழா நாயகன்.கலைஞரின் அருகில் […]
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பெயரில் “மொழியியல் பல்கலைக்கழகம்” தொடங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்கள் ஆடம்பரமான நிகழ்வுகளை தவிர்த்து, தங்களது வீடுகளில் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார். மேலும்,சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
கலைஞரின் 98 ஆவது பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட ஓவிய போட்டி உலக சாதனை பெற்றுள்ளது. கடந்த ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களுக்கு 98 ஆவது பிறந்த நாள். இந்த 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகளில் ஓவிய போட்டி ஆன்லைன் வழியாக நடைபெற்றுள்ளது. இதில், இந்தியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் இருக்கும் 98 மாணவர்கள் தரையில் கலைஞரின் ஓவியத்தை வரைந்தனர். கொரோனா காலத்தில் […]
மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றத்தை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று மறந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு மலர்த்தூவி மரியாதையை செலுத்திய பின் தயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார். இதனைத்தொடர்ந்து, முதல்வர் முக ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, துரைமுருகன், கேஎன் நேரு […]