சென்னை : உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு, இன்று சென்னை கலைவாணர் அரங்கில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் என பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசி உலக செஸ் சாம்பியன் குகேஷ், தமிழ்நாடு முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சர் உதயநிதிக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் […]
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் முன்பு திரைத்துறையில் பணியாற்றி வந்தவர் என்பதால், திரை துறையினர் பலரும், அரசியல் தலைவர்கள், திமுக தொண்டர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைப்பட பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து , துணை முதல்வர் உதயநிதிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு கலைஞர் கருணாநிதி – உதயநிதி இடையிலான ஒரு நிகழ்வையும் […]
சென்னை : திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட நாள், தந்தை பெரியார் பிறந்த தினம் , அறிஞர் அண்ணா பிறந்தநாள் என இன்று திமுக முப்பெரும் விழாவானது சென்னை ஒய்.எம்.சி.ஆர் மைதானத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இந்த முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இதில், மேடையில் இரண்டு பெரும் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒரு இருக்கையில் திமுக தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அமர்வார் என அனைவருக்கும் […]
சென்னை : திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று (செப்டம்பர் 17) திமுக பவள விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் வெகு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தந்தை பெரியார் பிறந்த தினம் , அறிஞர் அண்ணா பிறந்த தினம், திமுக தொடங்கிய நாள் என முப்பெரும் விழாவாக இந்த விழா நடைபெற உள்ளது. திமுக கட்சியானது அறிஞர் அண்ணாவால், 1949ஆம் ஆண்டு […]
சென்னை : தமிழகத்தில் நீண்ட வருடங்கள் கோலோச்சிய திராவிட முன்னேற்ற கழக அரசியல் கட்சியை கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தலைமை ஏற்று வழிநடத்தியவரும் , தமிழக முதல்வராக 4 முறை பொறுப்பில் இருந்து தமிழக அரசியலில் தனி ஆளுமை கொண்டவருமான கலைஞர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7) அனுசரிக்கப்படுகிறது. கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து செயல்படுத்தி வருகின்றனர். முன்னதாக திமுக […]
டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் பட்டியலின சமூகத்தினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்ட்ட இடஒதுக்கீட்டு முறையில் உள்இடஒதுக்கீடாக அருந்ததியர்களுக்கு கூடுதலாக 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இதே போல பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டின் கீழ் மேலும் உள் இடஒதுக்கீடு வழங்கின. இந்த உள்இடஒதுக்கீட்டுக்கு எதிராக முன்னதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2005இல் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அப்போது தீர்ப்பளித்து இருந்தது. அதில், உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. அதனை […]
சென்னை: அவதூறு பேச்சின் ஆதித்தாய் திமுக தான் என்றும், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறிய பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் சீமான் இன்று செய்தியாளர்களிடம் முன்வைத்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றியும், திமுக பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அப்போது குறிப்பிட்ட பட்டியலினம் பற்றி குறிப்பிட்டதாக கூறி, திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினரிடம் […]
தூத்துக்குடி: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு தலைவருக்கான பண்பு இல்லை என அமைச்சர் கீதாஜீவன் விமர்சனம் செய்யப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் பேசுகையில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றியும், திமுகவினர் பற்றியும் கடுமையாக விமர்சித்தார். மேலும் இதுபற்றி பாடல் ஒன்றையும் குறிப்பிட்டார். இதனை அடுத்து, சாதிய ரீதியில் கலைஞர் கருணாநிதியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக கூறி திருச்சி சைபர் கிரைம் பிரிவு […]
சென்னை: இன்று கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை திமுகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். சென்னையை அடுத்த மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. மொத்தம் இன்று பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வு மதுராந்தகம் வடக்கு ஒன்றிய சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டி இருந்தது. திமுக நிர்வாகி சுந்தர் குழந்தைகளுக்கு மோதிரத்தை அணிவித்தார்.
சென்னை : மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. முத்தமிழ் அறிஞர் எனப் போற்றப்பட்ட கருணாநிதி, திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் 1924 ஜூன் 3ஆம் தேதி பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி திமுகவினர் கொண்டாடுவது வழக்கம். கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி முதல்வர் ஸ்டாலின் அவரது நினைவிடத்தில் மரியாதை செய்தார். அவருடன், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட […]
செம்மொழி மாநாடு : மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் கோயம்புத்தூரில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. Read More – நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் […]
சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதி நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினாவில் ரூ.39 கோடியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்துக்கு உள்ளே […]
சென்னை மெரினாவில் புதியதாக கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் மற்றும் புனரமைக்கப்பட்ட அண்ணா நினைவிடம் ஆகியவற்றை இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மக்களவை தேர்தல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு நிகழ்வுகள் குறித்த நேரலை நிகழ்வுகளை இதில் காணலாம்…. பிரதமர் மோடியின் தமிழக பயணத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவுடன் மேற்கொண்டு […]
சென்னை மெரினாவில் புனரமைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை பிப்.26ம் தேதி முலதமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தமிழக அரசின் அறிவிப்பின்படி, சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. 2021இல் அதிமுக 7 எம்.பி சீட்களை வென்றுள்ளது.! இபிஎஸ் போட்ட புது கணக்கு.! ஏற்கனவே கருணாநிதி நினைவிட அமைக்கும் பணி 97% நிறைவு பெற்று இருந்தது. […]
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக தலைவர் முக ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பின் அடுத்த தலைவர் யார் என்று அழகிரி மற்றும் ஸ்டாலின் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. ஆனால், கடந்த 2014- ஆம் ஆண்டு அழகிரியை கட்சியில் இருந்து நீங்கியதால், கலைஞர் மறைந்து சுமார் 20 நாட்களுக்கு பிறகு திமுக கூட்டத்தில் ஒருமனதாக […]