விருதுநகர் : எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்த அறிக்கையில், அத்தியாவசியமற்ற செலவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்து வருவதாக விமர்சித்துக் கூறியிருந்தார். அது மட்டுமின்றி அந்த அறிக்கையில் “போதிய நிதி இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பல முடக்கி வைக்கப்பட்டுள்ளன. கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன. மு.க. ஸ்டாலின், அவரது தந்தை பெயரை அரசு கட்டிடங்களுக்கு வைக்க வேண்டுமென்றால், அவரது அறக்கட்டளை […]
சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நினைவாக கடலில் பேனா சின்னம் 42 மீ உயரத்தில் 39 கோடி செலவில் சிலை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. இதற்கு தடை கேட்டு திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையை தென் மண்டலம் […]
பிரதமர், உள்துறை அமைச்சர் தமிழ்நாடு வந்து சென்றிருப்பது மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது என மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மறைவால் தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் உள்ளது. தமிழக பாஜக அந்த இடத்தை சரியாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும். 10 % இட ஒதுக்கீட்டை திமுக எதுவுமே தெரியாமல் தன் பிராமண எதிர்ப்பை மட்டுமே வைத்து அரசியல் செய்கிறது. இந்த இடஒதுக்கீட்டை இந்திய […]
கடலுக்கு நடுவில் பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசின் சுற்று சூழல் துறை கடிதம். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக வங்க கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. இந்த நிலையில், […]
2016ஆம் ஆண்டு வரையில் முரசொலியில் எழுதிய 4,051 கடிதங்களை 54 தொகுதிகளாக தொகுத்து வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிட உள்ளனர். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, தென்பாண்டி சிங்கம், திருக்குறள் உரை என பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். மேலும், முரசொலி எனும் நாளிதழை நிறுவி அதனை திறம்பட நடத்தி வந்தார். அப்போது அந்த பத்திரிகை வாயிலாக கடிதங்களை தொண்டர்களுக்கு எழுதுவது வழக்கம். அப்படி அவர் 1968 […]
1961 முதல் முறை, 1983 ஆம் ஆண்டு இரண்டாம் முறை, 1997ஆம் ஆண்டு கடைசி முறை என மொத்தமாக 3 முறை இந்தியாவுக்கு பயணம் செய்துள்ளார் மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத். நேற்று இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானார். இவர் இறப்புக்கு பல நாட்டு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. மறைந்த எலிசபத் ராணி இந்தியாவுக்கு சுதந்திரத்திற்கு பின்னர் 3 முறை […]
எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம் என கமலஹாசன் ட்வீட். முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், மநீம கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில், […]
கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதன் அவர்கள் தேர்வு. 2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது, ரூ.5 லட்சம் பரிசுத்தொகையை நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கவுள்ளார். திருச்சியை சேர்ந்த ஐ.சண்முகநாதன் 1953-ஆம் ஆண்டு முதல் இதுநாள்வரை ஏறத்தாழ 70 ஆண்டுகளாக […]
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையை சுற்றி மெழுகுப்பூச்சுடன் கூடிய கருங்கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. இன்று மாலை 5:30 மணிக்கு சிலை திறப்பு விழா நடந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலையை திறந்து வைத்தார். […]
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை,துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று திறந்து வைக்கிறார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கிறார்.இந்த நிகழ்வு இன்று (28-ஆம் தேதி) மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை,துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நாளை திறந்து வைக்கிறார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கிறார்.இந்த நிகழ்வு நாளை (28-ஆம் தேதி) மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி அன்று சென்னையில் தமிழக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் அன்று சென்னை மாநகர வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 ஆம் தேதி முதல் […]
தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெற்றது.கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்நிலையில்,மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிடுகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சட்டமன்ற நூற்றாண்டு விழா,கருணாநிதி படத்திறப்பு […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக அறிவித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்த பீட்டர் அல்போன்ஸ். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 110 விதியின்கீழ் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், சிறுபான்மை நல ஆணைய தலைவர் […]
தமிழக சட்டப் பேரவையில் மின்சாரத்துறை,தொழிலாளர் நலன் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 110 விதியின்கீழ் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் கூறுகையில்:”5 முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்று 19 ஆண்டுகள் பதவி வகித்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்,மகளிருக்கும் […]
இரண்டு அரசு கல்லூரிகளுக்கு ‘கலைஞர் கருணாநிதி’ பெயர் சூட்டப்பட்டு தமிழக அரசு உத்தரவு. குளித்தலை அரசு கலை, அறிவியல் கல்லூரி பெயர் மாற்றம் செய்யப்பட்டு, டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி என்றும், புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கலைஞர் கருணாநிதி திருத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்த 1970-ஆம் ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி திருத்தியது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடல் வரிகளை குறைத்து தமிழ்தாய் வாழ்த்தாக மாற்றப்பட்டதை எதிர்த்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007ல் மோகன்ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தமிழ்தாய் வாழ்த்தை திருத்தியது செல்லும் என உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்ட திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தஞ்சாவூர் மூப்பனார் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் 11 அடி உயரமுள்ள முழு உருவச்சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.237 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை நாளை முதலமைச்சர் வழங்குகிறார்.
சென்னை:முன்னாள் முதல்வர் “கருணாநிதியின் நிழலாக இருந்த அவரது உதவியாளரான சண்முகநாதன் அவர்களின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளரான கோ.சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,நேற்று காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மறைந்த சண்முகநாதன் அவர்கள் மீது கொண்ட அதீத பாசத்தால்,நேற்று மாலை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில்,மீண்டும் […]
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் கோ.சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சண்முகநாதன் மீது அதீத பாசத்தால், இரண்டாவது முறையாக நேற்றிரவு மீண்டு அவரின் உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். நேற்று மாலை […]