ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் – திமுக வெளிநடப்பு.!

The session of the Tamil Nadu Legislative Assembly began with a speech by Governor Banwarilal Purohit at the Kalaivanar Arena.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.

தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.

நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரைமுடிந்த பின் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்க தாமதம் செய்வதை சுட்டிக்காட்டி, திமுக உறுப்பினர்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியிருந்தனர். இதையடுத்து, பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் – திமுக வெளிநடப்பு.!