தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காணொளி மூலம் கலந்துகொண்டபின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கொரோனாவை தடுக்க தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக […]
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பாக தீபக், தீபா தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம். வேதா நிலையத்தின் நிலம் கையகப்படுத்தியது, இழப்பீடு நிர்ணயித்ததற்கு எதிரான வழக்கில் விசாரணை முடிவு பெற்றது. ஜெ.தீபா, ஜெ.தீபக் மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து. ஜெயலலிதா வாரிசான தன்னிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று மனுதாரர் ஜெ.தீபக் தெரிவித்துள்ளார். ஒப்புதலே அளிக்காத போது ரூ.67.90 கோடி இழப்பீடு நிர்ணயித்தது சட்டவிரோதம் என ஜெ.தீபா தனது […]
9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு போடப்பட்ட ஆல் பாஸ் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதையடுத்து தமிழகத்தில் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் பொதுதேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். பின்னர் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு முன்பாக தமிழக அரசு எந்த கலந்தாலோசனையும் செய்யவில்லை என்றும் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9,10,11 வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை என்று தலைமை செயலாளர் அறிவிப்பு. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ கடந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக வரும் திங்கள் கிழமை முதல் 9,10,11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை என்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார். 9,10,11ம் […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறக்கட்டளை சட்டத்தை எதிரித்து தீபா தொடர்ந்து வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறக்கட்டளை சட்டத்தை எதிரித்து தீபா தொடர்ந்து வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தீபக் தொடர்ந்து வழக்கோடு தீபாவின் வழக்கும் விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா அறக்கட்டளை தொடர்பான வழக்குகள் இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்குகளும் விசாரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக் கூடும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், நேற்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பல்வேறு விதமான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர் பாதிப்பு என்கிற நிலை கவலையளிக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தவறாமல் முககவசம் […]
தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர்ந்து ஒரு நாள் பாதிப்பு 800-ஐ தாண்டி வருகிறது. கடந்த ஆண்டை போல் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிககைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், தலைமை செயலாளர் […]
பாதாள சாக்கடை பணிகளின்போது ஏற்படும் மரணங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு. பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாதாள சாக்கடை பணிகளின்போது ஏற்படும் மரணங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு என கூறியுள்ளது. மரணங்கள் நிகழ்ந்தால் சம்மந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்படுவர் என தெளிவுப்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் […]
கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தும் மனிதத்தன்மையற்ற செயல் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தும் மனிதத்தன்மையற்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மனிதர்களை ஈடுபடுத்தும் நடைமுறை தொடர்கிறதா? இல்லையா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கு 10.5% உல் ஒதுக்கீடு வழங்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கு ஒருபக்கம் எதிர்ப்பும் மறுபக்கம் அனைத்து சமூகத்திற்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்றும் சாதிவாரியாக கணக்கீடு நடத்தப்பட்ட பிறகு தான் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் பல விமர்சனங்கள் எழுந்தன. மேலும் இதுகுறித்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வன்னியர்களுக்கு […]
கல்பாக்கத்தை சுற்றி 14 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய ஆட்சேபனை இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்பாக்கத்தை சுற்றி 14 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டாம் என கடந்த 19-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலைய கதிர்வீச்சிக்கு உட்பட்ட 14 கிராமங்கள், பேரூராட்சிகளில் பத்திர பதிவுக்கு ஆட்சேபனையில்லை என தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அரசிதழில் குறிப்பிட்டுள்ள சர்வே எண் இடங்களை பத்திரப் பதிவு மேற்கொள்வதற்கு ஆட்சேபனை இல்லை என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் இடஒதுக்கீடு, கடன் தள்ளுபடி அனைத்துமே தேர்தல் நாடகம் என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், வன்னியர் சமுதாயத்திற்கு 20% உள் ஒதுக்கீடு கேட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் 10.5% வழங்கியதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியென்றால் மீதமுள்ள 9.5% மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்ற முடிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வந்துவிட்டாரா? என்றும் இது எந்த அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டது எனவும் […]
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று அதிமுக கூட்டணியில் உள்ள பாமக நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்ததை அடுத்து, சட்ட மசோதாவும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு […]
கோவை மொடிசியா அரங்கில் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. தமிழகத்தில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க இன்று கோவை வந்த பிரதமர் மோடி, கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று, ரூ.12,400 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்தார். இவ்விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பங்கேற்றனர். திட்டங்களை திறந்த வைத்த பின் […]
நீர் ஆதார திட்டங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமரை வரவேற்கிறேன். நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ணனுமதி அளிக்க வேண்டும். தண்ணீரை வீணாக்காமல், அவற்றை முழுமையாக பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றம். நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய […]
கோவையில் நடைபெறும் விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த பிரதமர் மோடி, கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில், மேடையில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நினைவு பரிசு வழங்கினர். இவ்விழாவில் பிரதமர் மோடி பல்வேறு அரசு நலத் […]
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் பிரதமர் மோடி. இன்று புதுச்சேரி வந்த பிரதமர் மோடி, அங்கு பல்வேறு திட்டங்களை அடிக்கல் நாட்டி, சில திட்டங்களி தொடங்கி வைத்தார். இதன்பின் பாஜக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றினார். இந்நிலையில், புதுச்சேரி வந்த பிரதமர் தனது பயணத்தை முடித்துவிட்டு, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை வந்தடைந்தார். அங்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் […]
9,10,11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என ஆசிரியர்கள் அறிவுறுத்துள்ளனர். சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல்வர் பழனிச்சாமி, பெற்றோரின் கோரிக்கையை ஏற்று 2020-21 ஆம் கல்வியாண்டில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுதேர்வின்றி ஆல்-பாஸ் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை விதி எண் 110ன் கீழ் முதல்வர் அறிவித்திருந்தார். கல்வி தொலைக்காட்சி, இணையம் மூலம் பாடம் கற்ற மாணவர்களின் சிரமத்தை […]
9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் வாசித்தார். இதன்பின் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுயின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் இன்று நடக்க உள்ளது. கடந்த 23-ஆம் தேதி சென்னை வாலாஜாசாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, பிப்.25 இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை […]