சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ‘இவன்தான் அந்த சார்’ என அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சதீஷ் படத்துடன் வருகை தந்துள்ளனர். எனினும், சட்டப்பேரவைக்குள் செல்வதற்கு முன்பு, கோஷமிட்ட அவர்கள் இந்த போஸ்டரை அவைக்குள் எடுத்துச்செல்லவில்லை. தொடர்ந்து 3 நாட்களாக தமிழக சட்டமன்றத்திற்கு கருப்பு நிற சட்டை அணிந்து வந்த அதிமுகவினர், அண்ணா பல்கலைகழக மாணவி வன்கொடுமை வழக்கில் ‘யார் அந்த […]
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை மூலம் ஏற்கனவே 1.15 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2024 – 25ஆம் நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை வேண்டி மேல்முறையீடு செய்தவர்களில் 1 இலட்சத்து 48 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன என இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது. விரிவுப்படுத்தப்பட […]
சென்னை : கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் குறித்து தங்களை பேசவிடாத காரணத்தால் அவை நிகழ்வை அதிமுக புறக்கணித்துள்ளது. தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்றனர். சட்டப்பேரவை தொடங்கியதும் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண விவகாரத்தை விவாதிக்கக் கோரி அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்நிலையில், அவை நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில், அதிமுக உறுப்பினர்கள் செயல்பட்டதால் இன்று ஒருநாள் சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க பேரவை தலைவர் தடை […]
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இன்று காலை சட்டப்பேரவை கூடியதும் சபாநாயகர் செல்வம் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். இதைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், எம்.எஸ் சுவாமிநாதன் உள்ளிட்டோருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ. 4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ஏப்ரல் […]
பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா ராஜினாமா செய்தார். எம்.எல்.ஏ: சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் பஞ்சாப் மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் தலைவர் பர்தாப் சிங் பஜ்வா திங்கள்கிழமை ராஜினாமா செய்தார். ராஜினாமா: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா ராஜினாமா செய்தார். ராஜ்யசபா […]
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ராஜஸ்தானில் குழந்தை திருமணங்களை பதிவு செய்வதற்கான மசோதாவை ராஜஸ்தான் சட்டசபை நிறைவேற்றியுள்ளது. ராஜஸ்தான் சட்டசபை வெள்ளிக்கிழமை குழந்தை திருமணங்கள் உட்பட திருமணங்கள் அனைத்தும் கட்டாயமாக பதிவு செய்வதற்கான 2009 சட்டத்தை திருத்தும் மசோதாவை 2021 இல் நிறைவேற்றியது. இதனால் பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் மற்றும் குழந்தை திருமணங்களை பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று […]
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர் அமளி காரணமாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க பேசியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 19 ஆம் தேதியன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்து பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால்,அனைத்து நாட்களிலும் நாடாளுமன்றம் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில்,நேற்று மக்களவையில் ஓபிசி மசோதா மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது,மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.விவசாயிகள் பிரச்சனை […]
சபாநாயகர் பதவிக்கு அப்பாவும், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழக சட்டசபைக்கான சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நேற்று பகல் 12:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்து இருந்தார். இதனால் சபாநாயகர் பதவிக்கு அப்பாவும், துணை சபாநாயகர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் மனுதாக்கல் செய்தார். சபாநாயகர் பதவிக்கும், துணை சபாநாயகர் பதவிக்கும் வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரைமுடிந்த பின் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் […]
சட்டப்பேரவைக் கூட்டம் 3 நாள்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. நேற்று தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. இந்நிலையில், இன்று கேள்வி நேரத்துடன் 2-வது நாளாக சட்டப்பேரவை தொடங்கியது. இன்று காலை முதல் சட்டப்பேரவையில் விறுப்பாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு பணிகள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது எனவும், முறையாக திட்டமிடப்படாத பொது முடக்கத்தால் பொருளாதாரம் […]
இன்று முதல் 3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.இதையடுத்து, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து கூட்டத் தொடரில் கலந்துகொண்டனர். இந்நிலையில், “BanNEET Save Tamilnadu students” , “நீட் தேர்வு ரத்து செய்” என்ற வாசகம் பொருத்திய முககவசத்துடன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், கடந்த மார்ச் மாதம் 23- ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று முதல் 3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக, தமிழக சட்டசபையில் சமூக இடைவெளியை பின்பற்ற போதிய இடமில்லாத நிலையில், கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதற்காக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எதிர்கட்சியினர் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் மூன்று அதிமுக எம்.எல்.ஏ.களுக்கு கொரோனா […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் வரும் 14-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது என்று தமிழக அரசு அறிவித்தது.கொரோனா பரவல் காரணமாக தனிமனித இடைவெளியை பின்பற்றி சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடரை நடத்த பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு முன்பாக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. எனவே […]
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், முதல்வர் கெலாட் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபக்க முயற்சி செய்து […]
ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட முதல்வருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்தார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நோட்டீஸை ராஜஸ்தான் சபாநாயகர் அனுப்பினார். இதை எதிர்த்து, சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் […]
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.இதனிடையே புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.இவருக்கு புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 3 நாட்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் சட்டப்பேரவையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. பின் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் சட்டமன்ற […]
புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். புதுச்சேரி மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்ற சட்டப் பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட வாக்குவாதத்தால் திமுக உறுப்பினர்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். அ திமுகவினர் வெளிநடப்பு செய்ததற்கான காரணம் தெரியாத நிலையில், திமுகவினர் சிற்றுண்டி திட்டம் குறித்த காங்கிரஸ் உறுப்பினர்களின் கருத்து தெரிவிக்கப்படாமல் இருந்ததால்தான் […]
சென்னையில் சற்று நிமிடங்களுக்கு முன் திமுக கொறடா சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக, காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக கூறினார். நேற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களை மத்திய அரசு முடக்கம் செய்து உள்ளது.அந்த பட்டியலில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது . இந்நிலையில் மு.க.ஸ்டாலின் சட்டபேரவை கூட்டத்தை கொரோனோ தடுப்பு நடவடிக்கை கருத்தில் கொண்டு ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் மத்திய அரசு தனிமைப்படுத்த வேண்டும் மாவட்டங்களை சுட்டிக்காட்டி மக்களின் அத்தியாவசிய தேவைகள் தடைபடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழக சட்டப்பேரவை வருகின்ற 31-ம் தேதியுடன் முடிவடைகிறது என சபாநாயகர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை வருகின்ற ஏப்ரல் 09-ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் தற்போது 31-ம் தேதியுடன் முடிவடைகிறது .31-ம் தேதி அன்று காலை ,மாலை சட்டசபை நடைபெறும் என சென்னையில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.