குவைத் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் இரங்கல்!

சென்னை : குவைத்தில் நடந்த தீ விபத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணதிற்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் என குவைத் என்பிடிசி நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்விபத்தில், கேரளாவை சேர்ந்த 19 பேர் , தமிழகத்தை சேர்ந்த 5 பேரும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெறித்து வருகின்றனர். அந்த வகையில், வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பக்கத்தில், “குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்.— TVK Vijay (@tvkvijayhq) June 13, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…
February 23, 2025
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025