டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து மரியாதை அளிக்கப்பட உள்ளது. குவைத்தின் மன்னர் எமிர், ஷேக் மெஷால் அல் அகமது அல் ஜாபர் அல் சபாவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அங்கு செல்கிறார். குறிப்பாக, இந்த பயணத்தின் போது, இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள இந்தியா தொழிலாளர்கள் தங்கி […]
சென்னை : ஃபெஞ்சல் புயலால் சென்னையில் மணிக்கு 40 கி.மீ வேகத்துடன் கூடிய கனமழை பெய்கிறது. தற்பொழுது, புதுச்சேரிக்கு கிழக்கே 180 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடக்கும்போது 70 – 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னையில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை […]
சென்னை :குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் தனித்தனி வாகனங்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குவைத் நாட்டின் அல்-மாங்கஃப் நகரின் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதில், கேரளாவை சேர்ந்தவர்கள் 24 பேர்களும், தமிழகத்தை சேர்ந்த 7 பேர், எஞ்சியவர்கள் ஆந்திரா, பிஹார் போன்ற […]
குவைத்: குவைத் நாட்டில் இருக்கும் மங்காப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில் 45 இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 பேர் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் எனவும், கேரளாவை சேர்ந்தவர்கள் 24 பேர்களும், தமிழகத்தை சேர்ந்த 7 […]
சென்னை : குவைத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை கொண்டு வர, சிறப்பு விமானம் அனுப்பப்பட்டது. 7 தமிழர்கள், கேரளாவைச் சேர்ந்த 23 பேர் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் என 31 பேரின் உடல்கள் கொச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. உடல்களைப் பெறுவதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மற்றும் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சி விமான நிலையத்தில் உள்ளனர். கொச்சின் விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் […]
குவைத்: குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பரிதாபமாக உயிரிழந்த 45 இந்தியர்களின் சடலங்கள் கொச்சிக்கு கொண்டு வரப்படுகிறது. குவைத் நாட்டில் உள்ள மங்காப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 45 இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 பேர் மருத்துவனமானயில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்தது. இந்த தீ விபத்தில் பலியான 45 இந்தியர்களில் கேரளாவை சேர்ந்தவர்கள் 24 […]
குவைத் : தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். அதில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது 7ஆக அதிகரித்துள்ளதால் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நேற்றைய தினம் 2 தமிழர்கள் உயிரிழந்தாக முதலில் சொல்லப்பட்ட நிலையில், இன்று காலை பாலியனோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. தற்பொழுது, அந்த தீ விபத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் […]
சென்னை : குவைத்தில் நடந்த தீ விபத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணதிற்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் என குவைத் என்பிடிசி நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்விபத்தில், கேரளாவை சேர்ந்த 19 பேர் , தமிழகத்தை […]
கேரளா : குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் நேற்று ஏற்பட்டபயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். தற்போது, குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரள மக்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று காலை கூடிய அவசர அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த தீ விபத்தில் உயிரிழந்த கேரள மாநிலத்தை சேர்ந்த நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க முடிவு […]
குவைத் : தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் மாங்காஃப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான அந்த குடியிருப்பில் 195 பேர் வசித்து வந்த நிலையில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில், இறந்தவர்களின் விவரம் வெளிவராமல் இருந்த நிலையில், தற்போது ராமநாதபுரம் அடுத்த தென்னவனூர் பகுதியை சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலத்தில், தமிழர்கள் பலியான […]
குவைத் : நாட்டின் தெற்கு அஹ்மதி கவர்னரேட்டில் உள்ள மங்காப் பகுதியில் தமிழர்கள் உள்பட இந்தியாவைச் சேர்ந்த பலர் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் சமையல் அறையில் நேற்று (ஜூன் 12) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 41 பேர் பலியானதாகவும், அதில் 2 தமிழர்கள் உள்பட 40 பேர் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ […]
குவைத் : அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் மத்திய அரசு தொலைபேசியில் பேசி வருகிறது. குவைத் நாட்டில் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் சிலர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் தமிழர்கள் உள்பட இந்தியாவைச் சேர்ந்த பலர் தங்கியுள்ளனர். இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் இதுவரை 41 பேர் பலியானதாகவும், அதில் 2 […]
குவைத் : குவைத்தின் அகுமதி ஆளுநரகம் பகுதியில் உள்ள ஆறு மாடிக் கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது 40 பேர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் 2 தமிழர்கள், 5 மலையாளிகள் உட்பட 10 இந்தியர்கள் உயிரிழந்ததாக குவைத் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தக் கட்டடத்தில் வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் பெரும்பாலும் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. சமையலறையில் ஏற்பட்ட தீ, கட்டிடத்தின் […]
குவைத்தின் மன்னர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா தனது 86-வது வயதில் காலமானார். ஷேக் நவாப் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் ஒரு வாரத்துக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத தொடர்ந்து இன்று உயிரிழந்தார். இவரது மரண செய்தியை அறிவிப்பதற்கு முன்பதாக குவைத் அரசு தொலைக்காட்சி குர்ஆன் வாசகங்கள் வாசிக்கப்பட்டன என தகவல் வெளியாகி உள்ளது. இதைதொடர்ந்து குவைத்தின் அரசு தொலைக்காட்சியில் “நமது ஷேக் நவாப் அல் அகமது அல் சபா […]
மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் நடிகை ஜோதிகா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ‘காதல் – தி கோர்’ என்ற திரைப்படம் நாளை மறுநாள் (நவம்பர் 23 ஆம் தேதி) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளான குவைத் மற்றும் கத்தார் அரசாங்கங்களால் இந்த படத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக, இந்த இரு நாடுகளிலும் பல இந்திய திரைப்படத்தின் கதைக்களம், அவர்களின் கருத்தியல்களுக்கு பொருந்தாத காரணத்தால் தடை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த […]
குவைத்தில் கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரன் உடல் இன்று இரவு திருச்சி விமான நிலையத்திற்கு வரும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம்கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன். வெளிநாட்டு வேலைக்கு அங்குள்ள ஏஜென்ட் மூலம் சென்றுள்ளார். கிளீனிங் வேலை என்று கூறிவிட்டு, ஒட்டகம் மேய்க்க சொன்னதாக அவர் தன் குடும்பத்தாரிடம் வேதனையுடன் கூறியுள்ளார். அதன் பின்னர் கடந்த 7ஆம் தேதி முதல் அவர் போன் ஆஃப் ஆகியுள்ளது. நேற்று முன்தினம் அவர் குவைத் […]
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமரன் எனும் நபர், குவைத் நாட்டிற்கு வேலை சென்ற இடத்தில் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த குடும்பத்தார் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். இங்கு இருக்கும் போது ஒரு வேலை சொல்லி அந்த வேலைக்காக பணியாட்களை எடுத்துவிட்டு, வெளிநாட்டிற்கு சென்றவுடன் அங்கு வேறு வேலையில் பணியமர்த்தும் அவலங்கள் தொடர்ந்து அங்கங்கே நடைபெற்று தான் வருகிறது. அப்படி தான் திருவாரூர் மாவட்டம்கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் தந்தை […]
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் இன்று இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் “சாம்ராட் பிருத்விராஜ்”. மன்னர் சாம்ராட் பிருத்விராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் படத்தில் சஞ்சய் தத், அசுவதோஷ் ராணா, லலித் திவாரி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில், இன்று இந்தியாவில் வெளியான இந்த படம் ஓமன் மற்றும் குவைத்தில் […]
குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் புகை பிடித்த தஞ்சை பயணியை காவல்துறை கைது செய்துள்ளது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது பயணி சேவியர் என்பவர் புகை பிடித்ததாக கூறப்படுகிறது. விமானத்தில் புகை பிடித்தற்கு சக பயணிகள் கடும் ஆட்சபனை தெரிவித்துள்ளனர். சக பயணிகளின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல் தஞ்சை பயணி புகை பிடித்துள்ளார். விமானம் சென்னையில் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் சேவியரை போலீசில் ஒப்படைத்தனர். இதன்பின் தஞ்சை பயணி சேவியரை கைது செய்து விமான நிலைய போலீஸ் […]
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் ஒரே வாரம் உள்ளதால் படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் “பீஸ்ட்” திரைப்படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் […]