நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் பூங்காக்களை மூட கோட்டாட்சியர் உத்தரவு!

Kottayam has issued an order to close the Kodaikanal parks under the control of the municipality.

நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் பூங்காக்களை மூட கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் மிக அதிக அளவில் கொரோனா பாதிப்பு காணப்பட்டதால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த சில வாரங்களாக அமலில் இருந்தது. இந்நிலையில், தற்பொழுது கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ளதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக சில சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொடைக்கானலிலும் சுற்றுலா தலங்களை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டி பூங்கா ஆகிய நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களை மூட கோட்டாட்சியர் முருகேசன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும் மறு உத்தரவு வரும் வரை பூங்காக்கள் திறக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.