சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், ஏற்கெனவே டெல்டா, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மிக கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழை தொடர்பான கூடுதல் விவரத்தை அளிக்கும் வகையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான், தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்டாவில் 1ம் தேதி […]
சென்னை : கொடைக்கானலில் 61-வது கோடை திருவிழாவானது மலர் கண்காட்சிகளுடன் கோலாகலமாக இன்று தொடங்கியுள்ளது. மலைகளின் இளவரசி என்று பெருமைக்குரிய இடம் தான் கொடைக்கானல், தமிழகத்தில் கோடை காலம் வந்தாலே அந்த வெப்பத்தை தாக்கத்தை தனிப்பதற்கு கொடைக்கானல், ஊட்டி என்று சென்று வருவோம். அதிலும் கொடைக்கானலில், கோடை காலத்தில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் வருடம் தோறும் இந்த மே மாதம் கோடை திருவிழாவானது மலர் கண்காட்சிகளுடன் தொடங்கிவிடும். தற்போது, இந்த ஆண்டும் இன்றைய நாளில் மலர் கண்காட்சிகளுடன் கோடை […]
Kodaikanal : இதுவரையில் கொடைக்கானல் செல்ல சுமார் 54 ஆயிரம் வாகனங்கள் இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை காலம் தொடங்கியது என்றாலே தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்ச்சியான இடங்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிடும். கட்டுக்கடங்காத வகையில் வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாவதை தடுக்க அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுநல வழக்கில் ஓர் புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, ஊட்டி கொடைக்கானல் வருவோர் , கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்டது போல, […]
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து வருவதால் , தற்போது ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலாவாசிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. மாணவர்களுக்கு கோடை விருமுறையும் ஆரம்பித்து விட்டதால் மேற்கண்ட சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் கடும் முயற்சி செய்து வருகின்றனர். ஊட்டியில் மட்டும் தினசரி சராசரியாக 20 ஆயிரம் வாகனங்கள் […]
E Pass : ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் மே 7ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு இ-பாஸ் எடுத்து வர வேண்டியது கட்டாயம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது கோடை காலம் ஆரம்பித்து விட்டதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் என்பதாலும் மலை பிரதேசங்களில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுசூழலை பாதுகாக்க பல்வேறு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களாக தாக்கல் செய்யப்பட்டன. இந்த பொதுநல மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் […]
Kodaikanal: கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி இளைஞர் மீட்பு மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு பாறையின் விளிம்பிலிருந்து செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, தன்ராஜ் என்ற […]
நடிகர் பாபி சிம்ஹா கடந்த ஆண்டிலிருந்து கொடைக்கானலில் இருக்கும் பேத்துப்பாறை பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். வீடு கட்டும் பணிகள் மற்றும் அதற்கான தொகையையும், கொடைக்கானலை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஜமீர், காசிம் முகமது ஆகியோர்களிடம் பாபி சிம்ஹா கொடுத்துள்ளார். அதன்பிறகு வீட்டை குறைவான தொகையில் கட்டி வைத்து இருந்தது பாபி சிம்ஹாவுக்கு தெரிய வந்து ஒப்பந்ததாரர்க ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்திற்கு மேல் […]
கொடைக்கானல் ஏரி சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை வாகனங்களுக்கு தடை. கொடைக்கானல் ஏரி சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை யொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள், பொதுமக்கள் செல்லலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
கொடைக்கானலில் இன்று முதல் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கை அமல் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,10 டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறப்படும்.இதனால் மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் […]
கொடைக்கானலில் நாளை முதல் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கை அமல் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் விசாகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 10 டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறப்படும். இதனால் மதுபானம் வாங்குவோர் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்த […]
நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் பூங்காக்களை மூட கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் மிக அதிக அளவில் கொரோனா பாதிப்பு காணப்பட்டதால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த சில வாரங்களாக அமலில் இருந்தது. இந்நிலையில், தற்பொழுது கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ளதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக சில சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடைக்கானலிலும் சுற்றுலா தலங்களை திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் பிரையண்ட் […]
புரேவி புயல் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கு செல்ல கூடிய அனைத்து பேருந்துகளும் இன்று மாலை 7 மணி முதல் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தற்பொழுது புரேவி புயல் உருவாகி உள்ளதால், இது கரையை கடக்கும் நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் சிலவற்றுக்கு கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக […]
கொடைக்கானலின் மேற்புற தோற்றத்தை கண்டு ரசிக்க தற்காலிக ஹெல்காப்டர் சேவையை தொடங்கவுள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலின் முழு அழகை ரசிப்பதற்காக தற்காலிக ஹெலிகாப்டர் சேவையை தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது. கோயம்புத்தூரில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர்களால் நடத்தி வரும் இந்நிறுவனம் தொடங்கும் ஹெலிகாப்டர் சேவை மூலம் ஏரி,கோக்கர்ஸ்வாக், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட கொடைக்கானலின் மொத்த மேற்புற தோற்றத்தை ஹெலிகாப்டரில் 15 நிமிடங்கள் பறந்தவாறு கண்டு களிக்கலாம். மேலும், இதனை அவசர கால மருத்துவ […]
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொடைக்கானலில் கடந்த 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் சவாரிக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசு விதித்த விதிமுறைகளை பின் பற்றி வாடகை சைக்கிள் கடைகளை திறந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலுக்கு வர விரும்பும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் இல்லாமல் வரலாம் என உதவி ஆட்சியர் சிவகுரு அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் முழுவதிலும் அதிகரித்து வந்தாலும் தமிழக அரசு மக்களின் நிலை கருதி சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் போக்குவரத்து கடந்த மாதமே இயக்கப்பட்டது, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு இ பாஸ் அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களை தவிர மற்ற இடங்களுக்கு இ பாஸ் இல்லாமல் […]
கொடைக்கானலில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கி அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் வர அனுமதி வழங்கி, அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா […]
கொடைக்கானலில் பெண் தீக்குளித்ததை வீடியோ எடுத்ததால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானலின் கீழ்மலை கேசிபட்டி பகுதியை சேர்ந்தவர் மாலதி(32). இவருக்கு சதீஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்று தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மாலதியின் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், தற்போது அந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும் கேள்விப்பட்டதை தொடர்ந்து மாலதி கணவரின் வீட்டில் சென்று தன்னை விட்டு விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்வது குறித்து […]
கொடைக்கானலில் வருடந்தோறும் நடைபெற்று வந்த கோடை விழாவானது இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு நாளை மறு நாள் மே 3ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு,தளர்வு பற்றி இன்னும் அரசு அறிவிக்கவில்லை. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தடைபட்டுள்ளன. தமிழகத்தில், பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெற இருந்த பல்வேறு விழாக்கள் […]
தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வுமையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுத்து இருந்தது. குறிப்பாக நீலகிரி,கோவை ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு என அறிவித்து இருந்தது. இதனால் நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்கள் மூடப்பட்டது. இந்நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பபெற்றது. இதை தொடர்ந்து கொடைக்கானலில் மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட அரசு பேருந்து ஒன்று கொடைக்கானலில் இருந்து பள்ளங்கி என்ற இடத்திற்கு சென்ற போது, கொடைக்கானல் மலைப்பாதையின் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில், கட்டுப்பாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. இந்தவிபத்தில், 10 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.