#JustNow: அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே இன்று தெரிவித்திருந்தது.

வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறியிருந்தது. மேலும், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விதித்திருந்தது. இந்த நிலையில், அடுத்த 3மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.