Tag: WeatherUpdates

#BREAKING: தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. […]

#Heavyrain 4 Min Read
Default Image

#BREAKING: வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகையில் இருந்து தெற்கு – தென்கிழக்கு தோசையில் 600 கிமீ தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 690 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. அடுத்த […]

#BayofBengal 2 Min Read
Default Image

உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு. தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணிநேரத்தில் இலங்கை கடற்கரையை நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் […]

#TNRain 2 Min Read
Default Image

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இன்று முதல் டிசம்பர் 22-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல். தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று முதல் டிசம்பர் 22-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை […]

#Chennai 2 Min Read
Default Image

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

அந்தமானுக்கு அருகே உருவாகியுள்ள காற்றுழத்த தாழ்வு நிலை காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை. ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மீன்வளத்துறை அறிவிப்பை அடுத்து தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு […]

#Fishermen # 3 Min Read
Default Image

#BREAKING: மீனவர்களுக்கு எச்சரிக்கை! டிச.20, 21 தமிழ்நாட்டில் கனமழை – வானிலை மையம்

டிச.20-ஆம் தேதி தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 19-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்பின் டிச.20-ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். இதுபோன்று டிச.21ம் […]

#Fishermen # 3 Min Read
Default Image

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! டிச.19ம் தேதி கனமழை!

டிச.19ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும். இதனால் டிச. 19ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் […]

#BayofBengal 2 Min Read
Default Image

நாளை உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு! வானிலை ஆய்வு மையம்..

நாளை வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை மையம் அறிவிப்பு. நாளை வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கில் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் எனவும் தகவல் கூறியுள்ளது. இதனிடையே, கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 18-ஆம் […]

#BayofBengal 2 Min Read
Default Image

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு!

சூறை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கடன் த 4 […]

#Chennai 3 Min Read
Default Image

#BREAKING: 26 மாவட்டங்களில் இன்று கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இன்று 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல்.  தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்பட 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, […]

#Chennai 3 Min Read
Default Image

அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல். தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூரில் மழை பெய்யக்கூடும். வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் […]

#TNRain 2 Min Read
Default Image

#BREAKING: 13ம் தேதி உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி!

வரும் 13-ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வங்க கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் வரும் 13-ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் மேலடுக்கு சுழற்சி தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. இதனிடையே, நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல், […]

#TNRain 3 Min Read
Default Image

மாண்டஸ் புயல்; காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் 9 கிமீ வேகத்தில் நகர்வு என வானிலை மையம் தகவல். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழிவிலுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வேலூரில் இருந்து 40 கிமீ தொலைவில் நீடிக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிருஷ்ணகிரிக்கு கிழக்கு வடகிழக்கில் 140 […]

#TNRain 2 Min Read
Default Image

அடுத்த 3 மணிநேரத்தில் இந்தந்த இடங்களில் மழை – வானிலை மையம்

அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செங்கல்பட்டு பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர புயல் மாண்டஸ் வலுவிழந்து, சாதாரண புயலாக மாறியுள்ளது. இந்த மாண்டஸ் புயல் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காரைக்காலில் இருந்து 180 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 260 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்றிரவு முதல் நாளை காலை வரை மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும். மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் […]

#Chennai 3 Min Read
Default Image

#BREAKING: தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது!

வங்கக்கடலில் தீவிர புயலாக நிலவி வந்த மாண்டஸ், புயலாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர புயல் மாண்டஸ் வலுகுறைந்து, சாதாரண புயலாக மாறியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் காரைக்காலில் இருந்து 180 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 260 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் தீவிர புயலாக நிலவி வந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்த நிலையில்,  புயல் […]

#Chennai 2 Min Read
Default Image

வேகம் அதிகரிப்பு! சென்னையை நெருங்கும் மாண்டஸ் புயல்!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் 12 லிருந்து 13 கிலோ மீட்டராக அதிகரிப்பு என வானிலை மையம் தகவல்.  சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 270 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. காரைக்காலில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 200 கி.மீ தொலையில் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் […]

#Chennai 3 Min Read
Default Image

#BREAKING: 85 கி.மீ வேகம்! நாளை இரவு கரையை கடக்கும் மாண்டஸ்!

மாமல்லபுரம் அருகே நாளை நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மாமல்லபுரம் அருகே நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் கிளை தென்கிழக்கு திசையில் […]

#MeteorologicalDepartment 4 Min Read
Default Image

இந்தந்த தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் வரும் 8, 9, 10 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் இருந்து 770 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும். மணிக்கு 15 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு […]

#Fishermen # 3 Min Read
Default Image

நாளை முதல் டிச.7 வரை மழை! இன்று 8 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம்

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு. நாளை முதல் டிசம்பர் 7-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் மற்றும் காரைக்காலில் இன்று கனமழை […]

#IMD 3 Min Read
Default Image

#BREAKING: தமிழகத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு. தமிழகத்தில் வரும் 5-ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 5-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி […]

#IMD 3 Min Read
Default Image