உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.
தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணிநேரத்தில் இலங்கை கடற்கரையை நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.