மாண்டஸ் புயல்; காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் 9 கிமீ வேகத்தில் நகர்வு என வானிலை மையம் தகவல்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழிவிலுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வேலூரில் இருந்து 40 கிமீ தொலைவில் நீடிக்கிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிருஷ்ணகிரிக்கு கிழக்கு வடகிழக்கில் 140 கிமீ தூரத்தில் நீடிக்கிறது. அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு – தென்மேற்கில் நகர்ந்து படிப்படிப்பாக காற்றழுத்த தாழ்வு மணடலமாக வலுவிழக்கும் என்றும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் 9 கிமீ வேகத்தில் நகர்கிறது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.