#BREAKING: மீனவர்களுக்கு எச்சரிக்கை! டிச.20, 21 தமிழ்நாட்டில் கனமழை – வானிலை மையம்
டிச.20-ஆம் தேதி தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 19-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்பின் டிச.20-ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இதுபோன்று டிச.21ம் தேதி தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் 21ம் தேதி கனமழை பெய்யக்கூடும்.
இதனிடையே, டிச.18ல் இன்று அரபி கடலின் மத்திய மேற்கு, தென்மேற்கு பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்பு உள்ளது. டிச.19ல் அந்தமான் கடல், தென்கிழக்கு வங்க கடலில் பலத்த சூறாவளி வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.