சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் 13ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய […]
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 13ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூரில் கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள், 11-ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகையில் மிக கனமழையும், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் விழுப்புரம், கடலூர், தி.மலை வட மாவட்டங்களில் பெரிய அளவில் சேதத்தை உண்டு செய்துள்ளது. இந்த மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டார்கள். எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று அரசியல் தலைவர்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை டி.பி.சத்திரம் பகுதி மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று நிவாரணம் வழங்குவதாக முன்னதாகவே […]
சென்னை: தமிழகம், புதுவையில் கோரத் தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், தி.மலை வட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மின் விநோகம் இல்லை. ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் மொத்தம் 12 மனித உயிர்களை பலி வாங்கியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்ட கணக்கெடுப்பில் 69 லட்சம் குடும்பங்கள், 2,11,139 ஹெக்டேர் விவசாய நிலம், 9,576 கி.மீ சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், விழுப்புரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]
சென்னை : ஃபெஞ்சல்’ புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கை எதிரொலியாக தஞ்சாவூர் திருவிடைமருதூர், கும்பகோணம் தாலுகாக்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை மற்றும் […]
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்வதால் காரணமாக விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டது. அதன்பிறகு, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் பரவலாக மழை பொலிவானது ஏற்பட்டது. இந்த நிலையில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது வலுப்பெறும் எப்போது கரையைக் கடக்கும் என இந்திய வானிலை […]
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 480 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த சில மணி நேரங்களாக நகராமல் இருந்த நிலையில், தற்போது மணிக்கு 2 கி.மீ வேகத்தில் மிகவும் மெதுவாக நகர தொடங்கியது இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புயல் உருவான […]
சென்னை : நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகளில், காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும். இன்று செங்கல்பட்டு, […]
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு நாளை அதிகாலை வரை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 1 மணி நேரத்திற்கு 10 கி.மீ வீதம் […]
சென்னை : வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அடுத்த 6 மணி நேரத்தில் (இரவு 7.30 மணிக்குள்) புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தாழ்வு மண்டலம் நகரும் வேகம் மணிக்கு 13கி மீ-ல் இருந்து 10 கி.மீ-ஆக குறைந்திருக்கிறது. புயல் உருவாகிய பின்பு, தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும், மேலும் 75 […]
சென்னை : வங்கக்கடலில் புயலாக உருவெடுக்க உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, மாலை 4 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து 530 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு தென்திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளது. இது, 15கி.மீ வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது எனவும் அடுத்த 6 […]
சென்னை : வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் பரங்கி – சென்னையை இடையே நவம்பர் 30இல் கரையைக் கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாள ர்பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருமாறலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மாறிமாறி நகர்ந்து வந்ததால், அது எப்போது கரையை கடக்கும்? எங்கு கரையை […]
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10 கி.மீ., வேகத்தில் நகர்கிறது, இது இன்று புயலாக வலுவடைந்து இலங்கையை ஒட்டி தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக நேற்று முதலே அந்தந்த மாவட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்து […]
தேனி : கனமழை காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக இன்று கன்னியாகுமரிக்கு விடுமுறை விடப்பட்டது. அதே போல, நிற்காமல் மழை பெய்து வருவதால் தேனி மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை அதனை […]
கன்னியாகுமரி : கனமழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதேபோல், இன்றும் அந்த மாவட்டத்திற்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழகு மீனா விடுமுறை அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பதிவாகியுள்ளது. நேற்று காலை 6 மணி […]
சென்னை : வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படவுள்ளது. காற்றழுத்த […]
தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் ஜன.28ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், இன்று நீலகிரியில் ஓரிரு இடங்களில் இரவு வேளையில் உறைபனி நிலவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டிப்பு..! சென்னை நிலவரம்: அடுத்த 48 மணி நேரத்திற்கு […]
வழக்கத்துக்கு மாறாக ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்கள் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 2 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி, […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, தொடர் கனமழை காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. வைகை அணையில் முழு கொள்ளளவான 71 அடிக்கும் தண்ணீர் நிரம்பியது. தற்பொழுது, வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் உபரி நீர் வினாடிக்கு 3100 கன அடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதனால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் […]
வழக்கத்துக்கு மாறாக ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை. விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 7-ல் கடலூர், விழுப்புரம், புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் […]