த.வெ.க கூட்டணிக்கு வருகிறதா வி.சி.க? செங்கோட்டையைன் ஓபன் டாக்.!

விஜய்யின் அரசியல் வருகையால் இரட்டை நிலைபாட்டில் இருக்கிறாரா திருமாவளவன் ? என்ற கேள்விக்கும் த.வெ.க நிர்வாகி செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

sengottaiyan thirumavalavan

சென்னை :திருப்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் முக்கியமாக, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) வருகிறதா என்ற கேள்விக்கு அவர் விளக்கம் அளித்தார். வி.சி.க கூட்டணிக்கு வருமா, இல்லையா என்பது தற்போது தெளிவாகத் தெரியவில்லை என்றும், ஆனால் வி.சி.க தொண்டர்கள் பலர் த.வெ.கவில் இணைந்து வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், எல்லோருடைய எண்ணங்களும் ஒரே திசையில் தான் இருப்பதாக கூறினார். அனைவரும் ஒருங்கிணைந்து தமிழகத்தில் நல்லாட்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கமே எல்லோருக்கும் உள்ளதாகவும், அந்த இலக்கு மிக விரைவில் வெற்றிகரமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பொதுவாக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் தற்போதும் இணைந்து செயல்பட்டு வருவதாகச் சொன்ன செங்கோட்டையன், கூட்டணிக்குள் சில சலசலப்புகள் இருப்பது தெரிகிறது என்றும் தெரிவித்தார். ஆனால் அது இயல்பான அரசியல் நடைமுறையே எனவும், அதனால் கூட்டணியின் அடிப்படை நோக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் வடமாநில அரங்கேற்றத் தாக்குதல் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை முதலில் தெரிவித்து, பின்னர் சில அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கூறியதாக உள்ள விமர்சனங்கள் குறித்து செங்கோட்டையனிடம் கேட்கப்பட்டது.

அந்த சூழலில், திருமாவளவன் தொடக்கம் முதல் இரட்டை நிலைப்பாட்டிலேயே இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) ஒரு “தீய சக்தி” என்று விஜய் கூறியதற்குப் பிறகு, அதையே ஒரு மேடையில் திருமாவளவன் கூறியதாகவும், பின்னர் அதைப்பற்றி “don’t care” என்று சொன்னதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அதனை செய்தியாளர்கள் கேள்வியாக எழுப்பிய நிலையில்,  அந்த கேள்விகளுக்கு செங்கோட்டையன் பதிலளிக்கும் வகையில் தனது நிலைப்பாட்டை விளக்கினார்.