மறு உத்தரவு வரும் வரை வட்டி வசூலிக்கக் கூடாது – முதலமைச்சர்.!
இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் , பல கிராமங்களிலும் , நகரங்களிலும் தனியார் வங்கிகள் , சிறிய நிதி நிறுவனங்கள் சுய உதவிக்குழுக்கள் ஆகியவை தினசரி , வாராந்திர ,மாதவட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றனர்.
தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் யாரும் வேலைக்கு செல்ல இயலாத நிலையில் மறு உத்தரவு வரும் வரை வட்டி வசூலிக்கக் கூடாது .
இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறினார்.