முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் ஊரடங்கு அக்.,31ந்தேதியுடன் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர் குழுவினருடனும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் மதியம் 2.30 மணிக்கு முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். […]
முதல்வர் பழனிச்சாமி அக்.,28ந்தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கு நடவடிக்கைகள் நிறைவடைய உள்ள நிலையில் வரும் 28ம் தேதி மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆலோசனையில் தியேட்டர்கள் திறப்பு, சென்னை புறநகர் ரயில் சேவை உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் உடல் நலக்குறைவால் அக்13ந்தேதி காலமானார். அவருடைய உடல் சொந்தரிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல்வரின் தாயார் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் முதல்வரை நேரில் சந்தித்தும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று SDPI மாநில தலைவர் நேரில் ஆறுதல் தெரிவித்தாக முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் SDPI கட்சி மாநில தலைவர் திரு.நெல்லை முபாரக், தேசிய துணைத்தலைவர் திரு.தெகலான் […]
இந்த ஆண்டு மட்டுமல்ல, உயிர் உள்ளவரை முதல்வர் எடப்பாடி தான் என கே.சி.கருப்பணன் கூறியுள்ளார். அதிமுக அரசில் கடந்த சில நாட்களாகவே முதல்வர் வேட்பாளர் குறித்த வாக்குவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களே நிற்பார்கள் என பன்னீர்செல்வம் அவர்கள் அறிவித்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, ஈரோடு அதிமுக அமைச்சர் கேசி. கருப்பன் அவர்கள் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் […]
மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்துக்கு 3 லட்சம் நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரையிலும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் பழனிசாமி அவர்கள் 14 பேரின் குடும்பத்துக்கும் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை சேர்ந்த பகவதி நாடார் என்பவரின் மகன் ராமையா, அகத்தீஸ்வரர் திருநந்தகுமார் என்பவர், […]
பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பிரதமரும், குடியரசுத் தலைவர் உட்பட பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், பிரமுகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் , பல கிராமங்களிலும் , நகரங்களிலும் தனியார் வங்கிகள் , சிறிய நிதி நிறுவனங்கள் சுய உதவிக்குழுக்கள் ஆகியவை தினசரி , வாராந்திர ,மாதவட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றனர். தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் யாரும் வேலைக்கு செல்ல இயலாத நிலையில் மறு உத்தரவு வரும் வரை வட்டி வசூலிக்கக் கூடாது . இந்த உத்தரவை […]
சட்டப்பேரவை அண்மையில் நடைபெற்றது, இதுகுறித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 110 விதியின் கீழ் ரூ.600 கோடி மதிப்பீட்டில் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ரூ.84 கோடி செலவில் வாங்கப்பட்ட புதிய 240 பேருந்துகளை, சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை அண்மையில் நடைபெற்றது. இதில் பல சிறப்பம்சங்களுக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து பேசிய […]
கோடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் இருவரும் பேச தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் கூறிய தகவல்கள் தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கோடநாட்டில் கொள்ளை,கொலை அங்கு நடந்த மர்மங்களுக்கு காரணம் தமிழக முதல்வர் தான் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கூறிய பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு […]