“நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை, உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

மக்களைச் சென்றடையும் திட்டங்களை வாக்குகளாக மாற்ற, களப்பணி மிக அவசியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

MK Stalin

சென்னை :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வாக்குத் திருட்டு மற்றும் SIR குளறுபடிகளுக்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவது இலக்கு என்று குறிப்பிட்டார். மக்களைச் சென்றடையும் திட்டங்களை வாக்குகளாக மாற்ற, களப்பணி மிக அவசியம் என்று அறிவுறுத்தினார்.

மாவட்டச் செயலாளர்களுக்கு, தொண்டர்களின் உழைப்பு மற்றும் கட்சியின் நற்பெயரை மக்களிடம் எடுத்துச் செல்ல உத்தரவிட்டார். ”ஏன் ஓய்வெடுப்பதில்லை என்று பலரும் கேட்கிறீர்கள். நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை, உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை. நீங்கள் ஆற்றும் களப்பணியே நமது இலக்கினை அடையும் முதல் படி. 2026 இல் மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது முழு வீச்சுடன் களப்பணியாற்றிடுவோம்.

தி.மு.கழகத்தில் குவிந்துள்ள புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை, இப்போது மட்டுமல்ல – வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் – ஏன் தமிழ்நாட்டில் எப்போதும் கழகமே முதன்மை சக்தி என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது. அதுமட்டுமல்லாது மதவெறி சக்திகளுக்கும் – அவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வோருக்கும் இங்கே மார்க்கெட் இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது” என்றார்.