சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் , தனது சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் , அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதில், சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு […]
MK Stalin : பொள்ளாச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதன்படி, இவ்விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதேசமயம் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். Read More – இனி ராணுவ வீரர்கள் வரி செலுத்த வேண்டாம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.! இதன்பின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் […]
உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன்12-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் நாளை குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இந்நிலையில்,குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றுவது அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி எனவும், பூத்து குதூகலிக்க வேண்டிய குழந்தைகளைக் கசியும் கண்ணீரோடு பார்க்கும் நிலையை இனியும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து குறிப்பில் முதல்வர் கூறியுள்ளதாவது: “குழந்தைகள் கால் முளைத்த கவிதைகள்;குழந்தைப் பருவம் […]
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கும்,மதுரை ஆதீனத்திற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு உள்ள நிலையில்,”சர்ச் மற்றும் மசூதியின் சொத்தில் அரசு தலையிடவில்லை. ஆனால்,திருக்கோயில் சொத்துக்களில் மட்டும் தலையிடுகின்றனர். இதனால்,அறநிலையத்துறை கொள்ளையடிக்கும் கூடாரமாக திருக்கோயில் மாறி வருகிறது.எனவே,அறநிலையத்துறை எனக் கூறப்படும் அறமில்லாத துறையை கலைத்துவிட்டு ஒரு நீதிபதி, வழக்கறிஞரை போட வேண்டும்.மேலும்,இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம்,பொருள்கள் போடக்கூடாது.” எனக் கடுமையாகச் சாடியிருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய இந்து […]
சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,சொத்து வரி குறைந்தபட்சம் 25 % முதல் அதிகபட்சம் 150 % வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான்: அந்த வகையில்,தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் […]
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (29.3.2022) முகாம் அலுவலகத்தில்,முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் எஸ்தர் டப்லோ அவர்கள் சந்தித்துப் பேசினார். பாராட்டிய எஸ்தர் டப்லோ: இந்த சந்திப்பின்போது,பேராசிரியர் எஸ்தர் டப்லோ அவர்கள்,கொள்கை முடிவுகளுக்கும்,அரசு முதலீடுகளுக்கும் தரவுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு அரசின் நிலையான உறுதிப்பாட்டை பாராட்டினார். மேலும், மாநிலத்தில் உள்ள நலிந்த பிரிவினருக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தைச் சீர்திருத்துவதற்கான பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு, முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான […]
நடப்பு நிதியாண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50% லிருந்து 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய,மாநில அரசுகளை ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது ஆரிக்கையில் அவர் கூறியதாவது: பேரறிஞர் அண்ணா கூறியது: ‘தொழிலாளர்களின் உரிமைகளும், நலன்களும் எவ்வளவுக்கு எவ்வளவு பாதுகாக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தொழில் வளம் பெருகும் என்பதால்தான், ‘தொழிலாளர் வாழ்வு பாழ் நிலமாக அல்லாமல் பசுமையோடு […]
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு இடத்திலும் கடை திறந்து மது விற்பனை செய்ய முடியாது என்றும்,மதுக்கடை அமைப்பதற்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும் பட்சத்தில் அதை ஆட்சியர் பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில்,டாஸ்மாக் வருமானம் இனிக்கிறது,கிராமசபை தீர்மானம் கசக்கிறதா? என்று மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் […]
திமுக என்பது ஓர் ஆற்றினைப் போன்றது. ஆனால்,அதிமுக என்பது கடலினைப் போன்றது. ஆறு தான் கடலில் போய் கலக்குமே தவிர, கடல் ஆற்றில் போய் கலக்காது என்று கூட்டுறவுத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் பதில் தெரிவித்துள்ளார். அதிமுகவில் தலைமை இல்லாததே நகர்ப்புற தேர்தலில் டெபாசிட் இழக்கக் காரணம் என்றும்,எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்காது எனவும்,அது தி.மு.க.வில் சங்கமமாகிவிடும் என்றும் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னதாக கூறியிருந்தார். இந்நிலையில்,கூட்டணி பலத்தோடு உள்ளாட்சித் […]
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல எனவும்,மக்களை ஏமாற்றிய தி.மு.க. இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுமா? என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதைத்தொடர்ந்து, நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் […]
கட்டுமானத்திற்கு தேவைப்படும் முக்கியப் பொருளான மணல் விலையை திமுக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் மணலின் விலையை ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “கட்டுமானப் பொருள்களில் மிக முக்கியமானதாக விளங்கும் சிமெண்ட், கம்பி, செங்கல்,மணல்,மரம் போன்ற பொருள்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நியாயமான விலையில் […]
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையினை எதிர்த்து திமுக அரசு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,இது மட்டுமல்லாமல் இதனை பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மத்திய […]
சென்னை:அரசியலமைப்பின் மதச்சார்பற்ற நெறிமுறைகளை நிலைநிறுத்துவதை இந்த குடியரசு தினத்தில் மீண்டும் உறுதி செய்வோம் என மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்றது.விழா தொடக்கத்தில்,ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து,பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள் உள்ளிட்ட பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். […]
சென்னை:மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று,சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழினத்தின் மாபெரும் போரில்,தமிழ்மொழி காக்க இன்னுயிர் ஈந்து,வீரமரணம் அடைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில்,ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில்,மொழிப்போர் தியாகிகள் தின வீரவணக்க நாளான இன்று, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் […]
புதிதாக துவங்க உள்ள என்எல்சி(NLC) நிறுவனத்தின் மூன்றாம் சுரங்கத்திற்கான இழப்பீட்டு நிவாரணத்தை நியாயமாக வழங்கக் கோரும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிட வேண்டும் என என்.எல். சி.நிறுவனம் மற்றும் தமிழக அரசுக்கு என்று ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் புதிதாக துவங்க உள்ள என்எல்சி(NLC) நிறுவனத்தின் மூன்றாம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு,ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும்,வீட்டு மனைகளுக்கு,ஊரகப் பகுதிகளில் சென்ட்டுக்கு 40,000 ரூபாயும்,நகரப் பகுதிகளில் 75,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும்,மேலும்,மறு குடியமர்வுக்காக […]
சென்னை:தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.சட்டமன்றத்தில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காததால் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. குடியரசு தலைவருக்கு நீட் விலக்கு மசோதா அனுப்பாததால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து […]
புரட்சித்தலைவி அம்மா பெயரிலான திட்டங்களை எல்லாம் மூடுவதிலேயே திமுக அரசு குறியாக இருப்பது தவறானது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பெரியார் திடலில் கொரோனாவுக்கான சித்த மருத்துவ சிறப்பு மையத்தை மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட 2,000 அம்மா மின் கிளினிக்குகள் மூடப்பட்டுவிட்டது. போதிய செவிலியர்கள் இல்லாத காரணத்தினால் செயல்படாமல் இருந்தது. இத்திட்டம் என்பது தற்காலிகமானது,ஓராண்டு […]
திமுக அரசு,ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை பெருங்குடியில் வசிக்கும் வங்கி ஊழியரான மணிகண்டன் என்பவருக்கு,தாரா என்ற மனைவியும்,இரண்டு மகன்களும் இருந்தனர். இந்த நிலையில்,தனது மனைவி மற்றும் மகன்களை கொலை செய்து விட்டு மணிகண்டன் தானும் தற்கொலை செய்துள்ளார். இந்த தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட […]
விவசாய இணைப்புகளில் தமிழக அரசு மேற்கொள்ளும் மின்மீட்டர் பொருத்தும் பணி விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும்,அதிமுக செய்தால் அது “ரத்தம்” திமுக மேற்கொண்டால் “தக்காளி சட்னியா”? என்றும் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் உள்ள விவசாய இணைப்புகளில் மின்மீட்டர் பொருத்தும் பணியை உடனடியாக நிறுத்திவிட்டு,மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்வதற்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் முதன் முதலாக […]
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்களின் காவல்துறை,உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா? என்றும்,திமுகவை ‘தீய சக்தி கூட்டம்’ என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்? என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கட்சி சார்பில் கோவை மாவட்ட மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று […]