அடுத்ததாக தர்மபுரியில் மலைகளின் மாநாடு நடத்த உள்ளேன் – சீமான்.!

அடுத்ததுமலை வளமே மண் வளம் என்று மலைகளின் மாநாடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் நடக்கிறது என்று சீமான் அறிவித்துள்ளார்.

Seeman

தர்மபுரி :நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தர்மபுரியில் மலைகளின் மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். மாடு, மரங்களின் மாநாட்டை தொடர்ந்து மலைகளும், நீர்நிலைகளும் ஆக்கிரமிப்புகளின் பிடியில் அழிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து, அவைகளை காப்பாற்றும் வகையில் மலைகளுக்கான மாநாட்டை நடத்த சீமான் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ”மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடாக திருச்சி மாநாடு அமையும். அதற்கடுத்து மலைவளமே, மண்வளம் எனும் நோக்கில் தருமரிபுரி, கிருஷ்ணகிரியில் மலைகளின் மாநாடு, தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு, தஞ்சாவூரில் தண்ணீரின் மாநாடு நடைபெறும்” என அறிவித்துள்ளார்.

இது குறித்து கூடுதல் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை, ஆனால் இந்த மாநாடு மலைகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படலாம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியில் இது நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

முந்தைய மாநாடுகளைப் போலவே, இதுவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமையலாம்.