சென்னை : விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா குஸ்தி 2', முதல் வார இறுதி நாட்களில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. எதிர்பார்ப்பிற்கு மாறாக, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வசூலில் சரிவு காணப்பட்டாலும், குடும்ப ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
சாக்னில்க் (Sacnilk) தகவல்படி, திங்களன்று சுமார் 66.1% வசூல் சரிவைச் சந்தித்து, இந்தியாவில் ரூ. 2.10 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. அன்றைய தினம் ஒட்டுமொத்த தியேட்டர் ஆக்கிரமிப்பு (Occupancy) 19.21% ஆக இருந்தது.
வெளியான 5 நாட்களில் இந்தியாவில் சுமார் ரூ. 15.95 கோடி நிகர வசூலையும், உலகளவில் ரூ. 24 கோடியையும் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்போர்ட்ஸ், காமெடி, ரொமான்ஸ் மற்றும் குடும்ப சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கதையம்சம், குடும்பங்களை தியேட்டருக்கு அழைத்து வந்துள்ளது.
விஷ்ணு விஷாலின் சுறுசுறுப்பான நடிப்பும், ஐஸ்வர்யா லக்ஷ்மியின் தன்னம்பிக்கை நிறைந்த நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இவர்களின் கெமிஸ்ட்ரியும், படத்திலுள்ள குஸ்தி காட்சிகள் ரசிகர்களுக்குப் பெரிய அளவில் பிடித்துள்ளது.
வார இறுதி நாட்களுக்குப் பிறகு வசூல் வேகம் குறைந்தாலும், மக்கள் மத்தியில் இருக்கும் நல்ல வரவேற்பு, வரும் நாட்களில் படம் தொடர்ந்து வசூலை ஈட்ட உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா போன்ற முக்கிய சந்தைகளில் படம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவது, விஷ்ணு விஷாலின் சினிமா பயணத்தில் இந்த வெற்றியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வார இறுதி நாட்களில் மீண்டும் வசூல் சூடுபிடிக்கும் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
