சென்னை :தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, சுங்கக் கட்டணங்கள் வாகன வகைகளைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.20 வரை கட்டணம் உயர்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
FasTag இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் 2 மடங்கு வசூலிக்கப்படும். இந்த உயர்வு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) ஆண்டு திருத்தத்தின் ஒரு பகுதியாகும். அதன்படி, கார், வேன், ஜீப் உள்ளிட்டவற்றுக்கு ரூ.5 கூடுதலாக கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஒருமுறைக்கு ரூ.5-ம், இருமுறைக்கு ரூ.10-ம் அதிகரிக்கப்படுகிறது. FasTag இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் 2 மடங்கு வசூலிக்கப்படும். கார், வேன், ஜீப் ஒரே நாளில் பலமுறை செல்வதற்கான கட்டணம், ரூ.95-ல் இருந்து ரூ.100 ஆக உயர்கிறது.
மேலும், டிரக், பஸ் ஒருமுறை செல்ல ரூ.225 இருந்து ரூ.230 ஆக அதிகரிப்படுகிறது.கார், வேன், ஜீப்களுக்கு மாதக் கட்டணம் ரூ.1,930-ல் இருந்து ரூ.1,975 ஆக அதிகரிப்படுகிறது. பல அச்சுகள் கொண்ட வாகனம் ஒருமுறை செல்ல ரூ.360-ல் இருந்து ரூ.370 ஆக அதிகரிப்படுகிறது.
மேலும், சில சுங்கச்சாவடிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவை மூடப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த மாற்றம் பொருள்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கலாம் என்று வணிகர்கள் எச்சரித்துள்ளனர்.
