சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.868.50-க்கு விற்கப்படுகிறது. கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை உயர்வு அமலாகியுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]
நாடு முழுவதும் நாளை முதல் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7 சதவீதம் வரை நேரடியாக உயர்த்தப்பட உள்ளது. கொரோனா பரவலின் தாக்கம் காரணமாக,மருந்துத் துறையினர் தொடர்ந்து மருந்துகளின் விலையை உயர்த்தக் கோரி வலியுறுத்தி வருகின்றனர்.இதன்காரணமாக,இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அத்தியாவசிய மருந்துகளின் விலையை மொத்த விலைக் குறியீட்டில் (WPI) 10.7 சதவிகித உயர்த்தவதாக அறிவித்தது. விலை உயர்வு: இந்நிலையில்,நாளை முதல் பெரும்பாலான பொதுவான நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் […]